கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என அந்நாட்டிற்கான நமது தூதரகம் அறிவறுத்தி உள்ளது.
உக்ரைனில் 6வது நாளாக ரஷ்யாவின் தாக்குதல் நீடிக்கிறது. கீவ் உள்ளிட்ட நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், அங்கு சிக்கி உள்ள இந்தியர்கள் மீட்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அங்குள்ள இந்தியர்கள் ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அழைத்து வரப்பட்டு, தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். மேலும், அவ்வபோது, உக்ரைன் தூதரகம் மூலம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.

இந்நிலையில், இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கீவ் நகரில் ரஷ்ய படைகள் அதிகம் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு வசிக்கும் மாணவர்கள் உட்பட இந்தியர்கள் அனைவரும் ,இன்று உடனடியாக வெளியேற வேண்டும். அங்கு கிடைக்கும் ரயில் அல்லது சாலை வழியாக எந்த வழியிலாவது வெளியேற வேண்டும் . இவ்வாறு கூறப்பட்டுள்ளது.