இளமைக்கான காரணம்; முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Updated : மார் 02, 2022 | Added : மார் 02, 2022 | கருத்துகள் (78) | |
Advertisement
சென்னை: ''உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கம் காரணமாக, இளமையாக இருக்கிறேன்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னையில், சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப் பள்ளியில், முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளிக்கு ஐந்து லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி, முதல்வர் பேசியதாவது:இந்த ஆண்டு என் வயது, 69. இதை கூறினால் சிலர் நம்ப மாட்டார்கள்.
TamilnaduCM, Stalin, Young, DMK, திமுக, ஸ்டாலின், முதல்வர், இளமை, ரகசியம்

சென்னை: ''உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கம் காரணமாக, இளமையாக இருக்கிறேன்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.



சென்னையில், சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப் பள்ளியில், முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளிக்கு ஐந்து லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி, முதல்வர் பேசியதாவது:இந்த ஆண்டு என் வயது, 69. இதை கூறினால் சிலர் நம்ப மாட்டார்கள். அதற்கு காரணம், உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியை, முறையாக செய்து வருகிறேன். என்னதான் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு இருந்தாலும், உங்களை சந்திக்கும்போது, ஐந்து வயது குறைந்து விடுகிறது.



latest tamil news

இந்தப் பள்ளிக்கு ஒவ்வொரு ஆண்டு வரும்போதும், ஒவ்வொரு பொறுப்பில் இருந்து படிப்படியாக உயர்ந்துள்ளேன். ஆனால், எப்போதும் இந்த பொறுப்புகளைப் பற்றி நான் கவலைப்பட்டது கிடையாது. உங்களில் ஒருவனாக என்றைக்கும் இருக்கிறேன். அதுதான் யாராலும் பிரிக்க முடியாதது. பதவி என்பது வரும் போகும்; அது வேறு. உங்கள் வாழ்த்துகளோடு என்னுடைய பயணம் தொடரும்; என்னுடைய பணி நிறைவேறும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (78)

meenakshisundaram - bangalore,இந்தியா
08-மார்-202203:02:33 IST Report Abuse
meenakshisundaram கடைமை கண்ணியம் கட்டுப்பாடு -க்கு பதில் தொப்பி ,ஸ்நொ பவுடர் -அரிதாரம் எத்தினி நாள் நிக்கும்னு பார்க்கத்தான் போறோம்
Rate this:
Cancel
Venkatesh - Chennai,இந்தியா
08-மார்-202200:30:26 IST Report Abuse
Venkatesh என்ன மறைத்தாலும் செய்த, செய்கின்ற பாவத்துக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். இவர் தலைமுறையும் காணாமல் போகும்.
Rate this:
Cancel
03-மார்-202204:37:06 IST Report Abuse
ராஜா தலைக்கு விக் வைத்துக்கொண்டு, மீசைக்கு சாயம் பூசிக்கொண்டால் அது ஒரு ஐந்து வயதை குறைவாக காட்டும். லண்டனில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் உடல் நலம் இருப்பது போலத்தெரியும். ஆனால், எண்பது வயது போல் அவர் நடை இருக்கிறது. கடவுள் போடும் உண்மையான வயதுக் கணக்கை மானிடர்கள் எப்படி அறியமுடியும்!?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X