உக்ரைனில் உள்ள தமிழர்களை மீட்க குழு அமைத்தது தமிழக அரசு

Updated : மார் 04, 2022 | Added : மார் 03, 2022 | கருத்துகள் (106) | |
Advertisement
சென்னை: உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க 3 எம்.பி.,க்கள், ஒரு எம்.எல்.ஏ மற்றும் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் தமிழக அரசு குழு அமைத்துள்ளது.இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரை தமிழகத்திற்கு அழைத்து வருவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 3) ஆலோசனை
Ukraine, Tamilnadu, UkraineStudents, உக்ரைன், தமிழகம், மாணவர்கள், மீட்பு, குழு, தமிழக அரசு

சென்னை: உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க 3 எம்.பி.,க்கள், ஒரு எம்.எல்.ஏ மற்றும் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் தமிழக அரசு குழு அமைத்துள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரை தமிழகத்திற்கு அழைத்து வருவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 3) ஆலோசனை நடந்தது. இன்று காலை 6 மணிவரை தமிழகத்தை சேர்ந்த 193 மாணவர்கள் தாய்நாடு திரும்பியுள்ள நிலையில், தமிழக அரசின் செலவில் அவர்கள் தங்களது சொந்த மாவட்டங்களுக்கு சென்றடைய உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


உக்ரைனில் தவிக்கும் தமிழர்களை மீட்க சிறப்புக்குழு

latest tamil news



தமிழக மாணவர்களை விரைந்து அழைத்து வருவதற்கு ஏதுவாக, உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து மற்றும் சுலோவாகியா ஆகிய நாடுகளுக்கு சென்று, அங்குள்ள இந்திய தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழகத்தை சேர்ந்த எம்.பி.,க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் 4 ஐ.ஏ.எஸ் அலுவலர்களும் இணைந்து சென்று ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (106)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PKumar - chennai,இந்தியா
04-மார்-202216:46:54 IST Report Abuse
PKumar first save tamil people then think about ukraine.....
Rate this:
Cancel
04-மார்-202206:33:28 IST Report Abuse
அப்புசாமி ஸ்டாலின்... பேரக் கேட்டதுமே சும்மா அதிருதில்லே... புட்டின் ஆடிப் போய் எல்லாரையும் வுட்டுட்டாரு. ப்ரிவியெட் ஸ்டாலின். ஹி.. ஹி.. கொஞ்சம் ரஷிய பாஷை கத்துக்கிறேன்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
04-மார்-202206:09:24 IST Report Abuse
Mani . V நல்லவேளை இதில் டக்ளஸ், அணில் போன்றோர் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X