உக்ரைனில் இந்தியர்கள் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு உள்ளனர் என்றும் அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் ரஷ்ய அதிபர் புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
![]() |
இந்தியர்கள் பிணை கைதிகள்
ரஷ்யா-உக்ரைன் இடையே 8 நாட்களாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து இருப்பதாவது: உக்ரைனில்உள்ள இந்தியர்களை உக்ரைன் ராணுவம் கேடயமாக பயன்படுத்தி வருகிறது. கைதிகளாக பிடித்து வைத்துள்ளதற்கான அதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளது. உக்ரைனின் கார்கிவ் நகரில் சுமார் 500க்கும் மேற்படட இந்தியர்கள் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற ரஷ்ய ராணுவம் முழு ஒத்துழைப்பை தரும். இவ்வாறு புடின் கூறி உள்ளார். புடினின் இந்த அறிவிப்பை இந்தியா மறுத்துள்ளது.
![]() |
அமைதியான வழியில் தீர்வு : பிரதமர்
உக்ரைன் விவகாரம் தொடர்பாக குவாட் மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசிய பிரதமர் மோடி பேச்சுவார்த்தையின் மூலம் அமைதியான வழியில் தீர்வுகாண வேண்டும். ஐ.நா., வழிகாட்டி படி அண்டை நாடுகளின் இறையான்மையை மதித்து நடக்க வேண்டும் என கூறினார்.