'மாணவர்கள் வெளிநாடு செல்ல முந்தைய அரசுகளே காரணம்'

Added : மார் 04, 2022 | கருத்துகள் (71) | |
Advertisement
வாரணாசி :''மருத்துவம் படிக்க வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு முந்தைய அரசுகளே காரணம்,'' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக, பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், உக்ரை னில் இருந்து மீட்டு வரப்பட்ட உ.பி.,யை சேர்ந்த மருத்துவ
'மாணவர்கள் வெளிநாடு,முந்தைய அரசு

வாரணாசி :''மருத்துவம் படிக்க வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு முந்தைய அரசுகளே காரணம்,'' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக, பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், உக்ரை னில் இருந்து மீட்டு வரப்பட்ட உ.பி.,யை சேர்ந்த மருத்துவ மாணவர்களுடன், பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
உக்ரைனில் இருந்து மீட்டு வரப்பட்ட பல மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் தங்கள் கோபத்தை என்னிடம் வெளிப்படுத்தினர். இப்படிப்பட்ட இக்கட்டான நேரத்தில் கோபம் வருவது இயல்பு தான்.


latest tamil news




தங்கள் பிள்ளைகளை அவ்வளவு துாரம் அனுப்பி படிக்க வைக்க, எந்தப் பெற்றோரும் விரும்ப மாட்டார்கள். நாட்டை ஆட்சி செய்த முந்தைய அரசுகள் மருத்துவப் படிப்புக்கான கொள்கைகளை முறையாக வகுத்திருந்தால், மாணவர்கள் வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அந்த தவறுகளை சரி செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-மார்-202215:29:03 IST Report Abuse
PothuManithan கேஸ் சிலிண்டர் விலை, பெட்ரோல் விலை, மாணவர்கள் உக்ரைன் போனது, இப்போது நடக்கும் ரஷ்யா உக்ரைன் போர், சாதி மத சண்டைகள், நீட் தற்கொலைகள், உலகில் அதிக பட்ச வரிகள், வறுமை, சாதாரண வாழ்க்கை வாழ்வதே கடினமாகி விட்ட நாட்டு சூழ்நிலை எல்லாவற்றுக்கும் முந்தைய ஆங்கிலேய அரசுதான் காரணம். அவன் அப்படி செய்ததற்கு அதற்கு முந்தைய அரசுதான் காரணம். சொன்னா நம்புங்க மக்களே! இத சொன்னா.... 😠😡
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-மார்-202200:46:44 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்இல்லை நேரு மட்டும் தான்....
Rate this:
Cancel
வால்டர் - Chennai,இந்தியா
04-மார்-202212:59:18 IST Report Abuse
வால்டர் இந்தியாவில் நடந்த நடக்கின்ற நடக்க போகிற எல்லாவற்றிற்குமே முந்தைய அரசையே காரணம் கூறும் நீங்கள் என்னதான் செய்கிறீர்கள் செய்ய போகிறீர்கள் ஜி?
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-மார்-202200:48:46 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ராமருக்கு கோவில் கட்டி, படேலுக்கு சிலை வைத்து, கங்ககையை சுத்தம் செய்யிறோமுன்னு, கக்கூஸ் காட்டுறோமுன்னு சொல்லி, விவசாயி வருமானத்தை இரட்டிப்பாக்குறோமுன்னு சொல்லி, ஆண்டுக்கு ரெண்டு கோடி வேலை கொடுப்போமுன்னு சொல்லி ஏமாத்துவோம் ஜீ....
Rate this:
Cancel
Thamizhan Valimai - Chennai,இந்தியா
04-மார்-202212:58:31 IST Report Abuse
Thamizhan Valimai நீங்கள் ஆட்சியில் இருந்து விலகினால் ரொம்ப நல்லது. ஜாதி, மத பேதத்தால் மக்களை பிரித்து எங்களை மிகவும் துயரத்தில் விட்டீர்கள். வட மக்கள் விழித்து விட்டார்கள். வரும் 10 ம் தேதி உங்களுக்கு மிகவும் அதிர்ச்சி உள்ளது தேர்தல் முடிவு அப்படி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X