முருகப்பெருமான் குறித்து அவதூறு பேச்சு: ஹிந்துக்கள் மனதை புண்படுத்திய சினிமா தயாரிப்பாளர்

Updated : மார் 04, 2022 | Added : மார் 04, 2022 | கருத்துகள் (212) | |
Advertisement
சென்னை: சினிமா தயாரிப்பாளர் கே.ராஜன் ஹிந்து கடவுள் முருகனை அவதூறாக பேசி ஹிந்துக்கள் மனதை புண்படுத்தியதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.சென்னையில் நடைபெற்ற ‛முகமறியான்' என்னும் திரைப்பட இசை வெளியீட்டு விழாகவில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த கே.ராஜன் பேசுகையில், கடவுள் முருகனை கிண்டல் செய்யும் விதமாக கொச்சையாக பேசியுள்ளார். இது
Lord Murugan, KRajan, CinemaProducer, Controversy, கடவுள் முருகன், தயாரிப்பாளர், ராஜன், சர்ச்சை, பேச்சு, அவதூறு

சென்னை: சினிமா தயாரிப்பாளர் கே.ராஜன் ஹிந்து கடவுள் முருகனை அவதூறாக பேசி ஹிந்துக்கள் மனதை புண்படுத்தியதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் நடைபெற்ற ‛முகமறியான்' என்னும் திரைப்பட இசை வெளியீட்டு விழாகவில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த கே.ராஜன் பேசுகையில், கடவுள் முருகனை கிண்டல் செய்யும் விதமாக கொச்சையாக பேசியுள்ளார். இது ஹிந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

விழாவில் அவர் பேசியதாவது: அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.. தாயையும் தந்தையையும் வணங்குபவன் வேற கடவுளயுமே நீ வணங்க வேணாம். வணங்காதே.. கடவுள் இல்லை. அம்மா, அப்பாவ தவிர வேற யாருமில்ல. சரி, அந்த கடவுள வச்சு ஒரு புத்தி சொன்னானே. கடவுளையே வச்சு புராணத்துல புத்தி சொன்னானே.. ஒரு நாரதர் வந்து மாம்பழம் கொடுக்குறாரு பார்வதி, சிவன் கிட்ட. ஒரு பழம் கொடுத்துட்டு அவன் போயிட்டான். அந்த மாதிரி ஆள்காட்டி இங்க நிறைய இருக்காங்க சினிமால.. குடும்பத்த ரெண்டா ஆக்கிருவாங்க.

அது மாதிரி நாரதர் கொடுத்துட்டு போயிட்டான். இப்போ அந்த பழம் யாருக்குனு போட்டி. ‛உலகத்தை யார் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கு தான் இந்த மாம்பழம் ஞானப்பழம்'னு சொல்லிட்டான். அப்போ முருகன் மயில் ஒன்ன எடுத்துட்டு உலகம் பூரா சுத்தி வர்றான். ஆனா விநாயகர் என்ன பண்ணான், அப்பா அம்மாவ சுத்தி வந்தான். கடவுள் அப்பா, அம்மா தான் என்பதை விநாயகர் மூலமாக சொல்கிற புராணம் அது. வேற ஒன்னுமில்ல அதுல. எவ்வளவும் படிக்க வேண்டாம், அந்த ஒன்ன படிங்க.


latest tamil news


விநாயகரே சொல்லிட்டாரு தெய்வம். அப்பா, அம்மா தான் இந்த உலகம். அது தெரியாத தறுதல தான், ஒரு மயில தூக்கிட்டு ஊரெல்லாம் சுத்தி கோவிச்சுகிட்டு பழனில போய் உட்காந்துட்டு இன்னிக்கு வரையும் இறங்க மாட்டீங்குது. ஆனா அது என்னனா.. திருத்தணில ஒன்னு இருக்குனுறான்.. அங்கெங்க ஒரு ஆறு இடம் சொல்றாங்க, அறுபடை வீடுன்றாங்க. அது இருந்துட்டு போகட்டும். அவன் அந்த கோவணத்துக்கு மேல ஒரு வேட்டி கட்டட்டும் அதான் என்னுடைய எண்ணம், அந்த பழனி முருகன். இவ்வாறு தயாரிப்பாளர் ராஜன் பேசியுள்ளார். இதற்கு மேடையில் இருப்பவர்களும் சிரிக்கின்றனர்.


latest tamil news


ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக மிகவும் கொச்சையாக பேசிய ராஜனும் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், ‛இப்படி எல்லாம் பேசுவதற்கு துணிச்சல் அற்ற கோழை கே.ராஜன் ஹிந்து மத கடவுளை, தமிழர்களின் தனிப்பெரும் கடவுளை மட்டும் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. முருகப்பெருமான் குறித்து அவதூறாக பேசிய திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்' என கோரியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (212)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilArasan - Nellai,இந்தியா
06-மார்-202210:02:12 IST Report Abuse
TamilArasan விடியல் ஆட்சியில் இது எல்லாம் சர்வ சாதாரணம்...அவர்களுக்கு வாக்களித்த இந்துக்களுக்கு இன்னும் வேணும் ...
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
06-மார்-202206:14:08 IST Report Abuse
Bhaskaran விரைவில் வடபழனி கோவில் அறங்காவலராக நியமிக்கப்படும் வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது
Rate this:
Cancel
Govind - Delhi,இந்தியா
06-மார்-202200:47:49 IST Report Abuse
Govind ரஷீல் மற்றும் ஜார்ஜ் தங்களுடைய கருத்துக்களை நாகரீகமாக வெளியிட்டு இருக்கிறார்கள் . இதை கண்டித்தும் இருக்கிறார்கள். நன்றி இந்த ராஜன் மாதிரியான ஆட்கள் பேசுவதை துர்வேஷ் மற்றும் அமெரிக்காவிலிருந்து ரசிக்கும் ராமகிருஷ்ணன் நடேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. . இதற்க்கு சம்பந்தமில்லாமல் Globe C17 Master கதை வேறு..ஐயோ பாவம் ஒவொவொரு ஆட்சியிலும் இது மாதிரி ராணுவ தளவாடங்கள் வாங்க தான் படுகின்றன. இப்போது வாங்க பட்டு இருக்கும் Rafael இந்தியாவை காங்கிரஸ் ஆண்டாளும் காக்கும் பா ஜா க ஆண்டாளும் காக்கும்..2004 வரை பா ஜா க ஆட்சியில் தான் அமெரிக்கா உடனான உறவை சிறப்படைந்தது என்பதை மன்மோகன் சிங்க் ஒப்பு கொண்டார் .. அதை அடித்தளமாக கொண்டு தான் 2008 கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பையும் மீறி பா ஜா க வின் ஆதரவோடு இந்திய 123 ஒப்பந்தத்தை நிறைவேற்றியது...இதை குறித்து பாராளுமன்றத்தில் பேசுகையில் மன்மோகன் சிங்க் பா ஜா க வுக்கு நன்றி தெரிவித்தார். .. ..பா ஜா க ஆட்ச்சியில் இருந்து பதவி சுகம் பெற்ற திராவிட சிங்கங்கள் பெயர்களை சொல்லுங்கள் பாப்போம் ... எங்கேய போயிற்று அந்த பகுத்தறிவு.. மிச்சிக்கண்ணுக்கு வந்து உம்மோடு கும்மி அடித்ததா? மற்றும் துர்வேஷ் ...பிள்ளையார் படத்தை போட்டு விட்டு செய்திக்கு சம்பந்தமில்லாத செய்திகளை வெளியிட்டு இருக்கிறீர்கள்.. அதுவும் ஆதி சங்கரர் வாழ்ந்த காலம் வேறு புத்த மதம் தோன்றிய காலம் வேறு .. அதும் அமைதியை போதிக்கும் புத்த மதத்தினர் எதற்கு ஆதி சங்கரரை அடிக்க வேண்டும் .. அப்படியே அடிபடுபவர் எதற்கு திருவிடை சிசு என்று சொல்ல வேண்டும்..பகுத்தறிவு என்று சொல்லி பெருமை பட்டு கொள்கிறீர்கள் ...இப்படி சம்பந்தமில்லாத உளர்களை எடுத்து விடுவதை தவிர்க்கவும் .. இப்படி ஏதாவது அமில வார்த்தைகளை கொட்டுவதால் உமக்கு என்ன சந்தோஷம்? நாகரீகம் இல்லாத வார்த்தைகளை கொட்டி விட்டு அப்பாடா இன்றைக்கு நாம் நாலு பேரின் நிம்மதியை கெடுத்தோம் என்று நிம்மதியா ? உம்மை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது..நீங்கள் இருவரும் நீங்கள் சார்ந்து இருக்கு சமூகத்தில் என்ன நல்ல மாற்றங்களை கொண்டு வந்தீர்கள் என்பதை முதலில் ஆராயவும் ? நீங்கள் இருவரும் நல்ல மன னால மருத்துவரை சந்திக்கவும். உங்களை சார்ந்து இருப்பவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X