கொரோனா நான்காவது அலைக்கு... வாய்ப்பில்லை? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

Updated : மார் 05, 2022 | Added : மார் 05, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி :'கொரோனா வைரஸ் பரவலின் நான்காவது அலை ஜூனில் துவங்கும்' என, கான்பூர் ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது குறித்து, நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 'நான்கு மாதங்களுக்கு முன்பாகவே இவ்வாறு கணிக்க முடியாது' என, மருத்துவ மற்றும் கணித நிபுணர்கள் கூறியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் மூன்றாவது அலை தற்போது
கொரோனா நான்காவது அலை,வாய்ப்பில்லை?

புதுடில்லி :'கொரோனா வைரஸ் பரவலின் நான்காவது அலை ஜூனில் துவங்கும்' என, கான்பூர் ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது குறித்து, நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 'நான்கு மாதங்களுக்கு முன்பாகவே இவ்வாறு கணிக்க முடியாது' என, மருத்துவ மற்றும் கணித நிபுணர்கள் கூறியுள்ளனர்.


latest tamil news




கொரோனா வைரஸ் பரவல் மூன்றாவது அலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துஉள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, கடந்த, 24 மணி நேரத்தில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 5,921ஆக இருந்தது. நாடு முழுதும் இதுவரை, 4.29 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மூன்றாவது அலையை உருவாக்கிய, 'ஒமைக்ரான்' வகை கொரோனா வைரஸ், அதிக அளவில் பரவினாலும், பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை.


சந்தேகம்



இந்நிலையில், கான்பூர் ஐ.ஐ.டி.,யின் கணித மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர்கள் சமீபத்தில், ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டனர். அதில், ஜூன், 22ம் தேதி நம் நாட்டில் நான்காவது அலை உருவாகும். ஆக., இறுதியில் உச்சத்தை அடையும் என்றும், அக்., வரை இதன் பாதிப்பு நீடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.இது புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. 'கொரோனா புதிய அலை வருவதை இவ்வாறு பல மாதங்களுக்கு முன்பே கணிக்க முடியாது' என, பல்துறை நிபுணர்கள்
கூறியுள்ளனர்.

சென்னை கணித அறிவியல் மையத்தின் பேராசிரியர் சிதாப்ரா சின்ஹா கூறுகையில், ''தற்போது வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், புதிய அலை பற்றி கணிக்க முடியாது,'' என்றார்.ஹரியானா மாநிலத்தில் உள்ள அசோகா பல்கலையின் இயற்பியல் மற்றும் உயிரியல் துறை பேராசிரியர் கவுதம் மேனன் கூறியுள்ளதாவது:குறிப்பிட்ட தேதியில் நான்காவது அலை உருவாகும் என உறுதியுடன் கூறியுள்ளதன் வாயிலாக, இந்த கணிப்பு குறித்து சந்தேகம் எழுகிறது.


முன்னெச்சரிக்கை



புதிதாக கொரோனா உருமாற்றம் அடையுமா, அது எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயமற்ற ஒன்று. இதை முன்னதாகவே கணிக்க முடியாது. ஆனால், அவர்கள் கூறும் தகவல்களை வைத்து முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலையைச் சேர்ந்த பொது சுகாதார நிபுணரான பிராமர் முகர்ஜி கூறியுள்ளதாவது:இது ஏதோ ஜோதிடம் பார்ப்பது போல் உள்ளதே தவிர, தகவல் அறிவியல் ஆய்வாக தெரியவில்லை. என்னுடைய அனுபவத்தில், குறுகிய கால கணிப்புகளை மட்டுமே செய்ய முடியும். நீண்டகால கணிப்புகள் செய்ய முடியாது; செய்தாலும் அது நம்பகத்தன் மையுடன் இருக்க முடியாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நான்காவது அலை வரும் என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள கான்பூர் ஐ.ஐ.டி.,யின் பேராசிரியர்கள் ராஜேஷ்பாய், சங்கர் தர், ஷலப் கூறியுள்ளதாவது:சில கணித மற்றும் புள்ளியியல் கோட்பாடுகளின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வழிமுறைகள் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்படுபவை தான்.நமக்கு தெரியாத பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே ஆய்வுகளின் நோக்கம். அந்த அடிப்படையில் தான், இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள்கூறியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-மார்-202211:56:02 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் டீம்கா / நாரசொலி / சமச்சீர் பாய்ஸ் அண்ட் அல்லக்கைஸ் நியூஸை புல்லா படிங்க "சில கணித மற்றும் புள்ளியியல் கோட்பாடுகளின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது." நோய்ப்பரவல் / வைராலஜி அடிப்படையிலான ஆய்வு அல்ல
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
06-மார்-202209:14:27 IST Report Abuse
Mohan அவசரப்பட்டா எப்படி இன்னும் ரெண்டு மாசம் இருக்கு 4வது பொறக்க. அப்புறம் பாருங்க இதே நிபுணர்கள் வாயிலிருந்து வரும் விளக்கத்தை
Rate this:
Cancel
06-மார்-202208:10:19 IST Report Abuse
வலியவன் அப்போ kandipa irukku
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X