5 மாநில தேர்தல் முடிவுகளால் ஜனாதிபதி தேர்தலில்...தாக்கம் ஏற்படுமா?

Updated : மார் 06, 2022 | Added : மார் 06, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
வரும் 10ம் தேதி வெளியாகும் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள், ஜனாதிபதி தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள், வரும் 10ம் தேதி வெளியாகின்றன. இதில், பஞ்சாப் தவிர இதர மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்
  5 மாநில தேர்தல் முடிவுகள்,ஜனாதிபதி தேர்தல்...தாக்கம்

வரும் 10ம் தேதி வெளியாகும் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள், ஜனாதிபதி தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள், வரும் 10ம் தேதி வெளியாகின்றன. இதில், பஞ்சாப் தவிர இதர மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 25ல் முடிகிறது.


எதிர்கால அரசியல்பார்லிமென்டின் இரு சபைகளின் எம்.பி.,க்கள் மற்றும் மாநில, யூனியன் பிரதேச எம்.எல்.ஏ.,க்கள் அடங்கிய, 'எலக்டோரல் காலேஜ்' வாயிலான மறைமுக தேர்வு வாயிலாக ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவார். எலக்டோரல் காலேஜில் 776 எம்.பி.,க்கள், 4,120 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களின் மொத்த ஓட்டு, 10லட்சத்து 98 ஆயிரத்து 903 ஆக இருக்கிறது. இதில் பெரும்பான்மைக்கு தேவையான 5 லட்சத்து 49 ஆயிரத்து 452 ஓட்டுகள் பெறுபவரே ஜனாதிபதி ஆவார்.பா.ஜ., ஆளும் உ.பி.,யில் அதிகபட்சமாக 83 ஆயிரத்து 824 ஓட்டுகள் உள்ளன. அடுத்த இடங்களில் மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகியவை உள்ளன. அதனால் உ.பி., மற்றும் உத்தரகண்ட் சட்ட சபை தேர்தல் முடிவுகள், பா.ஜ.,வுக்கு மிகவும் முக்கியமாக உள்ளன.


latest tamil newsஇந்த தேர்தல்களில் பா.ஜ.,வுக்கு தற்போதுள்ள இடங்கள் குறைந்தால், அது எதிர்கால அரசியல் நிகழ்வுகளை பாதிக்கும். ஜனாதிபதி தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.தற்போது உ.பி., சட்டசபையில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, 65 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. இக்கூட்டணிக்கு இதர மாநில சட்டசபைகளில், 2 லட்சத்து 10 ஆயிரம்
ஓட்டுகள் உள்ளன. இவற்றுடன் லோக்சபாவில், 2 லட்சத்து 30 ஆயிரம் ஓட்டுகள், ராஜ்ய சபாவில், 75 ஆயிரம் ஓட்டுகளை சேர்த்தால், ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., கூட்டணிக்கு 5 லட்சத்து 20 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன.


பதவிக் காலம்இவை போக பார்லி.,யிலும், சட்டசபைகளிலும் உள்ள சுயேச்சை உறுப்பினர்களின் உதவியுடன், ஜனாதிபதியை தேர்வு செய்ய தேவையான 5 லட்சத்து 49 ஆயிரத்து 452 ஓட்டுகளை பெற்றுவிட முடியும். அதனால், ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை பா.ஜ., மிகவும் எதிர்பார்த்துள்ளது. இது தவிர, இந்த தேர்தல் முடிவுகள் ராஜ்ய சபாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது, ராஜ்ய சபாவில், பா.ஜ., - எம்.பி.,க்கள் 97 பேர் உள்ளனர். இந்தாண்டு, உ.பி., மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து, 75 எம்.பி.,க்கள் ராஜ்ய சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் வரும் ஜூனில் ராஜ்யசபா எம்.பி.,க்கள் ஆறு பேரின் பதவிக் காலம் முடிகிறது. இவர்களில் மூவர் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள். அ.தி.மு.க., சார்பாக மூன்று எம்.பி.,க்களின் பதவிக்காலம் முடிகிறது. தமிழக சட்டசபையில் அ.தி.மு.க.,வுக்கு, 66 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ளதால், ராஜ்யசபாவில் அதன் பலம் குறையும். பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பலம் ராஜ்யசபாவில் குறையும் பட்சத்தில், மசோதாக்களை நிறைவேற்றுவது சிரமமாக இருக்கும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopal - Chennai,இந்தியா
06-மார்-202211:38:59 IST Report Abuse
Gopal நேர்மையாக தேர்தல் நடந்திருந்தால் பீஜேபி தோற்கும். ஆனால் அங்கே நடப்பது எல்லாம் கோல்மால். பணத்தை கொடுத்து விரலில் மையை வைத்துவிட்டு வாக்காளர்களை ஓட்டு போட வரவேண்டாம் என்று தடுத்து பீஜேபி கும்பல் எல்லா ஓட்டுக்களையும் போட்டுக்கொள்வது நடந்துள்ளது...நடக்கிறது. அராஜகத்தின் உட்சபட்சம் அங்கே நடக்கிறது.
Rate this:
Cancel
06-மார்-202210:52:32 IST Report Abuse
kulandai kannan அடுத்த ஜனாதிபதியும் கண்டிப்பாக பாஜக/RSS பின்புலத்தவர்தான்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
06-மார்-202209:17:12 IST Report Abuse
Sampath Kumar பிஜேபி நிச்சயம் தோற்கும் அனால் உ.பி. மட்டும் செய்க வாய்ப்பு உள்ளது காரணம் எல்லாம் மக்களுக்கு புரியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X