தமிழக எம்.பி.,க்கள் பயணம் ரத்து: உக்ரைன் விவகாரத்தில் மத்திய அரசு அதிரடி!

Updated : மார் 06, 2022 | Added : மார் 06, 2022 | கருத்துகள் (128) | |
Advertisement
'மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடப்பதால், உக்ரைனிலிருந்து இந்தியர்கள் அனைவரும் விரைவில் மீட்கப்படுவர்; அதனால், உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு நீங்கள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை' என தமிழகஎம்.பி.,க்களிடம், மத்திய அரசு தெரிவித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால், உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு

'மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடப்பதால், உக்ரைனிலிருந்து இந்தியர்கள் அனைவரும் விரைவில் மீட்கப்படுவர்; அதனால், உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு நீங்கள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை' என தமிழகஎம்.பி.,க்களிடம், மத்திய அரசு தெரிவித்துள்ளது.



latest tamil news


கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால், உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ மாணவர்கள். இந்நிலையில் அவர்களை மீட்க, மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அறிவிப்புஇதற்கிடையே, உக்ரைனில் மருத்துவம் படிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களை மீட்க, எம்.பி.,க்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவை, உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பப் போவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து, தி.மு.க., எம்.பி.,க்கள் சிவா, அப்துல்லா, கலாநிதி உள்ளிட்ட குழுவினர், உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு செல்வதற்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற, டில்லியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று சந்தித்து பேசினர்.பின், நிருபர்களிடம் சிவா கூறியதாவது:உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்று, இந்தியர்களை மீட்பது பற்றி ஆலோசிக்கவே, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தோம். அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க, இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி ஜெய்சங்கர் எங்களிடம் தெரிவித்தார்.

அங்குள்ள தமிழக மாணவர்களிடம், வெளியுறவு அதிகாரிகள், ஹிந்தியில் மட்டுமே பேசுவதாக கூறப்படுவது பற்றியும் ஜெய்சங்கரிடம் தெரிவித்தோம். இது குறித்து, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்குவதாக ஜெய்சங்கர் கூறினார். கூடுதல் விமானங்களை ஈடுபடுத்தி, இந்தியர்கள் அனைவரும் விரைவில் மீட்கப்பட்டுவிடுவர் என அவர் உறுதியளித்தார். இந்நிலையில் தமிழக முதல்வருடன் ஆலோசித்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பு குறித்து, வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:உக்ரைனில் உள்ள போர்ச்சூழலில், வெளியுறவு அதிகாரிகளே திணறி வருகின்றனர். ஏற்கனவே நான்கு மத்திய அமைச்சர்கள், உக்ரைனின் அண்டை நாடுகளில் தங்கி, மீட்புப்பணிகளை கவனித்து வருகின்றனர்.இந்நிலையில் மாணவர்களை மீட்டு வர, உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு செல்ல, தமிழக குழு அனுமதி கேட்டுள்ளது. தமிழக எம்.பி.,க்கள் அங்கு செல்வதால் என்ன செய்துவிட முடியும். ஒவ்வொரு மாநிலமும், இவ்வாறு அனுமதி கேட்டால் என்ன செய்வது.எம்.பி.,க்கள் அங்கு சென்று, அவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அதற்கு யார் பொறுப்பு ஏற்பது என்பது உள்ளிட்ட பல பிரச்னைகள் இந்த விவகாரத்தில் அடங்கியுள்ளன.


latest tamil news




அவசியமில்லை



உக்ரைனில் இருந்து இந்தியர்கள் அனைவரும், இன்னும் இரண்டு நாட்களில் மீட்கப்பட்டுவிடுவர். தற்காலிக போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அதனால், உக்ரைனில் நீங்கள் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என, தமிழக எம்.பி.,க்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.இதையடுத்து, உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு எம்.பி.,க்களை அனுப்ப திட்டமிட்ட தமிழக முதல்வரின் முயற்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

- நமது டில்லி நிருபர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (128)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Godyes - Chennai,இந்தியா
11-மார்-202213:53:38 IST Report Abuse
Godyes மூணு கோடி ரூபாய செல்லரிச்சுடிச்சி,. அம்புடுதே.
Rate this:
Cancel
Godyes - Chennai,இந்தியா
11-மார்-202213:51:49 IST Report Abuse
Godyes அவனுங்க எதுக்கோ சண்ட போடறானுவ. அங்கே போய் என்னா பண்ண போறீங்க. ஊர் சுத்தாம தொகுதி வேலைய பாருங்கய்யா. .
Rate this:
Cancel
Gopal - Jakarta,இந்தோனேசியா
11-மார்-202210:00:42 IST Report Abuse
Gopal என்னப்பா ஆச்சு நிதி ஒதிக்கீடு பண்ணினாங்களே ரூபாய் மூணு கோடி ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X