15,900 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்: மத்திய அரசு

Updated : மார் 07, 2022 | Added : மார் 06, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
புதுடில்லி: உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து கடந்த 22ம் தேதி முதல் தற்போது வரை 15,900 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ், இன்று மட்டும் 11 சிறப்பு விமானங்கள் மூலம், உக்ரைன் அண்டை நாடுகளில் இருந்து 2,135 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு உள்ளனர்.
Ukraine, Indians, Centre,

புதுடில்லி: உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து கடந்த 22ம் தேதி முதல் தற்போது வரை 15,900 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ், இன்று மட்டும் 11 சிறப்பு விமானங்கள் மூலம், உக்ரைன் அண்டை நாடுகளில் இருந்து 2,135 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு உள்ளனர். இதன் மூலம் கடந்த 22 முதல், 15,900 இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டு உள்ளனர். நாளை 8 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. அதில் 5 புடாபெஸ்ட், 2 விமானங்கள் சுசெவா மற்றும் புகாரெஸ்ட் நகருக்கு ஒரு விமானம் இயக்கப்பட்டு 1500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அழைத்து வரப்பட உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் உடனடியாக தங்களது மொபைல் எண் மற்றும் இருப்பிடத்தை பகிருமாறு தெரிவித்துள்ளது.
ஹங்கேரியில் உள்ள இந்திய தூதரகம் ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ் இந்தியர்களை மீட்கும் கடைசி கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. தூதரகம் ஏற்பாடு செய்யாமல், சொந்த செலவில் தங்கி உள்ளவர்கள் அனைவரும் தூதரகத்தை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.ஹங்கேரியில் உதவி மையம்

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரையும் மீட்பதற்காக ஹங்கேரி தலைநகரில் புடாபெஸ்ட்டில், உதவி மையத்தை இந்திய தூதரகத்தை ஏற்பாடு செய்துள்ளது.


latest tamil news
ஹங்கேரியில் உள்ள சிறப்பு அதிகாரி ராஜிவ் போட்வாடே கூறுகையில், ஹங்கேரி-உக்ரைன் எல்லையில் எத்தனை இந்தியர்கள் எல்லையை கடக்கிறார்கள், தங்குமிடம், போக்குவரத்து போன்றவற்றை மற்ற குழுக்கள் கவனித்து வருகின்றன. 150க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் எங்களுக்கு உதவுகிறார்கள் என தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
07-மார்-202221:52:40 IST Report Abuse
Rajagopal மாணவர்கள் பத்திரமாக ஊர் வந்து சேர்ந்தது மகிழ்ச்சியான விஷயம். இன்னும் அங்கே சிக்கிக்கொண்டிருக்கிற மீதி மாணவர்கள் எப்படியாவது ஊர் வந்து சேர வேண்டும் என்று அனைவரும் பிரார்த்திக்க வேண்டும். அவர்கள் எதனால் அங்கே சென்றார்கள், என்ன சொன்னார்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டாம். அவர்கள் நமது பிள்ளைகள்.
Rate this:
Cancel
Akash - Herndon,யூ.எஸ்.ஏ
07-மார்-202206:51:53 IST Report Abuse
Akash students complaining lack of food and beverage arrangements in the source airport, quality food in aircraft, bad entertainment options. They them in nearest airport. govt does not pay for charged to reach their village, congress will take govt to task for these irresponsible lapses.
Rate this:
srini - ,
07-மார்-202208:15:27 IST Report Abuse
sriniwhy should I pay my tax for this incapable students, they took the bank loan right, ask them to get additional loan and pay for their chartered flight, dont talk like an idiot politicians...
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
06-மார்-202221:35:33 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN தமிழக மாணவர்களை உக்ரேயினில் இருந்து அழைத்து வந்ததா விடியல் அரசு ? ஒரு விஷயம் புரியவே இல்லை. சென்னை வரை அழைத்து வருவது இராணுவம். அரசு ஏற்பாடு செய்த ஷேர் ஆட்டோவுக்கு செலவு 3.5 கோடியா..
Rate this:
srini - ,
07-மார்-202208:17:05 IST Report Abuse
sriniwell said Mr Ramakrishnan, this Dravidian party fit to fix the stickers on central government schemes, the cost to print the sticker is 3.5 cr...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X