உள்ளாட்சிகளில் தேர்வான போட்டி வேட்பாளர்கள் ...அடம்!

Updated : மார் 08, 2022 | Added : மார் 06, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
ஆளும் கட்சியின் போட்டி வேட்பாளர்களாக களமிறங்கி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர், துணை தலைவராக வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர், முதல்வர் ஸ்டாலின் எச்சரித்தும், தங்கள் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து அடம் பிடிக்கின்றனர். அவர்கள் அடம் பிடிப்பதற்கும், கட்சி நடவடிக்கை எடுத்தால் பார்த்துக் கொள்ளலாம் என 'தெம்பு'டன் செயல்படவும், தி.மு.க., மாவட்ட
உள்ளாட்சிகளில் தேர்வான போட்டி வேட்பாளர்கள் ...அடம்!

ஆளும் கட்சியின் போட்டி வேட்பாளர்களாக களமிறங்கி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர், துணை தலைவராக வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர், முதல்வர் ஸ்டாலின் எச்சரித்தும், தங்கள் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து அடம் பிடிக்கின்றனர். அவர்கள் அடம் பிடிப்பதற்கும், கட்சி நடவடிக்கை எடுத்தால் பார்த்துக் கொள்ளலாம் என 'தெம்பு'டன் செயல்படவும், தி.மு.க., மாவட்ட செயலர்களின் மறைமுக ஆதரவே காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மேலிட உத்தரவை மீறி செயல்பட்டதால், எம்.எல்.ஏ., உட்பட பலரை கட்சியிலிருந்து நீக்கி பொதுச் செயலர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில், சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 21 மாநகராட்சிகள், 132 நகராட்சிகள், 436 பேரூராட்சிகளை, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றின.
அதிருப்திமேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர்களை தேர்ந்தெடுக்க, இம்மாதம் 4ம் தேதி மறைமுக தேர்தல் நடந்தது.அப்போது, கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக, ஆளுங்கட்சியின் போட்டி வேட்பாளர்கள் பலர் களமிறங்கி வெற்றி பெற்றனர்.இதனால், கூட்டணி கட்சியினர் கொதித்தெழுந்தனர். முதல்வர் ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து, தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
முதல்வர் உத்தரவுஉடன் முதல்வர் ஸ்டாலின், 'கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்; இல்லா விட்டால் கட்சியில் இருந்து நீக்கப்படுவர்' என எச்சரித்து அறிக்கை வெளியிட்டார்.அவரது உத்தரவை ஏற்று, வெற்றி பெற்ற போட்டி வேட்பாளர்கள் சிலர், தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால், பலர் ராஜினாமா செய்யாமல் அடம் பிடித்து வருகின்றனர். இதன் காரணமாக, போட்டியாக களமிறங்கி வெற்றி பெற்றவர்கள், அவர்களுக்கு ஆதரவு அளித்த தி.மு.க., நிர்வாகிகள் வரிசையாக, கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.மனு தாக்கல்


கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சியை தி.மு.க., கூட்டணி கைப்பற்றி இருந்தது. தலைவர் பதவி, கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சி சார்பில், கலாராணி வேட்பு மனு தாக்கல் செய்ய தயாரானார். ஆனால், தி.மு.க., கவுன்சிலர்கள், தங்கள் கட்சியை சேர்ந்த புவனேஸ்வரிக்கு ஆதரவு அளித்ததால், அவர் தலைவரானார்.புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சி 11-வது வார்டில் வென்ற, இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலருக்கு துணை தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் சார்பில், முத்தமிழ் செல்வி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். திடீரென தி.மு.க., கவுன்சிலர் தமிழ்ச்செல்வன் வேட்பு மனு தாக்கல் செய்து வெற்றி பெற்றார். இவர்கள் இருவரும் பதவி விலகாமல் அடம் பிடிக்கின்றனர்.பதவி விலக வலியுறுத்தி, தி.மு.க., நிர்வாகிகள் பேச்சு நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதியில், திருக்கழுக்குன்றம் பகுதி வன்னியர் சமுதாயத்தினர் நிறைந்த பகுதி. அச்சமுதாயத்தினருக்கு பேரூராட்சி தலைவர், துணை தலைவர் பதவி வழங்கப்படவில்லை.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையுண்ட நகரம். இந்த பேரூராட்சி தலைவர் பதவிக்கு, காங்கிரஸ் சார்பில் செல்வமேரி அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், தி.மு.க., போட்டி வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற்று விட்டது. அதேபோல, குன்றத்துார் நகராட்சி துணைத் தலைவர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டாலும், தி.மு.க., போட்டி வேட்பாளர் வெற்றி பெற்றார். இவர்களும் பதவி விலக மறுத்து வருகின்றனர்.காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட, திண்டுக்கல் மாவட்டம், வடுகபட்டி உள்ளிட்ட மூன்று பேரூராட்சிகளில் தி.மு.க., போட்டி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களும் ராஜினாமா செய்ய முன்வரவில்லை.
ராஜினாமாதி.மு.க., மாவட்ட செயலர்கள் மறைமுக ஆதரவு அளித்து வருவதால், போட்டியாக களமிறங்கி வெற்றி பெற்ற ஆளுங்கட்சியை சேர்ந்த பலர் ராஜினாமா செய்ய மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், கடலுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., அய்யப்பன் உட்பட பலர், தி.மு.க.,விலிருந்து நேற்று நீக்கப்பட்டனர்.இதற்கான அறிவிப்பை, கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்டு உள்ளார். அவரது அறிக்கை: மதுரை மாவட்டம், திருமங்கலம் நகர தி.மு.க., பொறுப்பாளர் முருகன், உசிலம்பட்டி நகர செயலர் தங்கமலைபாண்டி, உசிலம்பட்டி ஒன்றிய செயலர் சுதந்திரம், தலைமை செயற்குழு உறுப்பினர் ரவிகுமார்.உசிலம்பட்டி நகர இளைஞர் அணி அமைப்பாளர் சந்திரன், வேலுார் மேற்கு மாவட்ட ஆம்பூர் நகர செயலர் ஆறுமுகம், ஷபீர் அகமது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க., மகளிர் தொண்டரணி துணை செயலர் மீனா ஜெயகுமார் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால், கட்சியில் இருந்து தற்காலிகமாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.தி.மு.க., கவுன்சிலர்களை பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டளிக்க வைத்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலரான முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்படும், இதுபோன்ற முக்கிய புள்ளிகள் மீது அதிரடி நடவடிக்கை தொடரும் என தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.தி.மு.க., நிர்வாகி மீதுபோலீசில் புகார்பொன்னேரி நகராட்சி துணை தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் வேலா. இவரது கணவர் கதிரவன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட துணை செயலர். வேலாவின் வெற்றியை தடுக்கும் வகையில், பொன்னேரி நகர நிர்வாகி உள்ளடி வேலையில் ஈடுபட்டதால், அ.தி.மு.க., வேட்பாளர் விஜயகுமார், துணை தலைவராக வெற்றி பெற்றார்.இதனால், தி.மு.க., வேட்பாளர் வேலா தரப்பினருக்கும், தி.மு.க., நகர நிர்வாகிக்கும் இடையே மோதல் அரங்கேறி உள்ளது. இதில், வேட்பாளரின் உறவினர் ஒருவர் தாக்கப்பட்டார். அவர் பொன்னேரி போலீசில் புகார் அளித்துள்ளார்; ஆனால், நடவடிக்கை இல்லை. இந்நிலையில், கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கக் கோரி, தி.மு.க., அமைப்பு துணை செயலர் அன்பகம் கலை, அறிவாலய மேலாளர் ஜெயகுமார் ஆகியோரிடம் புகார் மனு அளித்து உள்ளனர்.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (21)

madhavan rajan - trichy,இந்தியா
10-மார்-202213:25:54 IST Report Abuse
madhavan rajan கட்சித்தலைமையே குடும்ப தயவால் வந்தது. தனது வாரிசை அடுத்த தலைமையாக ஏற்கவேண்டும் என்று கட்டளை வேறு. தொண்டர்கள் உழைத்துதான் தலைவர்களை உருவாக்குகிறார்கள். அந்த தலைவர்கள் தொண்டர்களை மதிக்காமல் அவர்களுக்கு அதிக காசு தரும் நபர்களுக்கு பதவியை கொடுத்தாள் எவ்வளவு காலம்தான் தொண்டர்கள் இவர்கள் குடும்பத்துக்கு அடிமையாகவே இருப்பார்கள். தலைவருக்கு தொண்டர்கள் தயவு தேவை என்பதையும் உணரவேண்டும்.
Rate this:
Cancel
Laks Giri -  ( Posted via: Dinamalar Android App )
07-மார்-202216:27:05 IST Report Abuse
Laks Giri பதவி விலகுங்கள் என்று சொல்வது எதிர்கட்சிகளை சமாதானப்படுத்த நடத்தப்படும் நாடகம்
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
07-மார்-202215:09:34 IST Report Abuse
அசோக்ராஜ் மிரட்டுவதை நிறுத்துவது நல்லது. போராளிகளை கட்சியை விட்டு நீக்கினால் பாஜகவில் சேர்ந்து பிறகு கவர்னர் ஆகி விடுவார்கள். எச்சரிக்கை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X