மகனுக்கு செயல் தலைவர் பதவி? வைகோவின் முடிவால் புகைச்சல்!

Updated : மார் 07, 2022 | Added : மார் 07, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
சென்னை-விரைவில் நடக்க உள்ள ம.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், தலைமை நிலைய செயலராக உள்ள தன் மகன் துரைக்கு, செயல் தலைவர் அல்லது துணை பொதுச்செயலர் பதவி வழங்க, வைகோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ம.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், வரும் 9ம் தேதி, சென்னை தாயகத்தில் நடக்கிறது. கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளுக்கு பாராட்டு

சென்னை-விரைவில் நடக்க உள்ள ம.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், தலைமை நிலைய செயலராக உள்ள தன் மகன் துரைக்கு, செயல் தலைவர் அல்லது துணை பொதுச்செயலர் பதவி வழங்க, வைகோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.




latest tamil news


மகனுக்கு பதவி வைகோவின் முடிவால் புகைச்சல்

ம.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், வரும் 9ம் தேதி, சென்னை தாயகத்தில் நடக்கிறது. கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. சமீபகாலமாக, கட்சிப் பணிகளில் இருந்து வைகோ ஒதுங்கி உள்ளார். உடல் நலம் கருதி, வீட்டில் யோகா மற்றும் எளிமையான நடை பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும், அவர் பிரசாரம் செய்யவில்லை. அவருக்கு பதிலாக, துரை தான் தேர்தல் பிரசாரம் செய்தார்.



latest tamil news


முதல்வர் ஸ்டாலின் எழுதிய, 'உங்களில் ஒருவன்' நுால் வெளியீட்டு விழாவிலும், வைகோ பங்கேற்காமல், துரையையே பங்கேற்க வைத்தார்.வரும், ௯ம் தேதி நடைபெற உள்ள மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், வைகோ பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அக்கூட்டத்தில் தான், விரைவில் பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.



பின், பொதுக்குழு கூட்டத்தில், செயல் தலைவர் பதவி அல்லது துணை பொதுச்செயலர் பதவியை துரைக்கு வழங்கி, அதற்கேற்ற வகையில், கட்சி சட்ட விதிகளை திருத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக, ம.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் அதிருப்தி மாவட்ட செயலர்கள் மத்தியில், புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-மார்-202211:20:57 IST Report Abuse
kulandai kannan இதெல்லாம் ஒரு பொழப்பு...
Rate this:
Cancel
வால்டர் - Chennai,இந்தியா
07-மார்-202211:00:18 IST Report Abuse
வால்டர் "தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது" - தொண்டர்களா? கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் யாரையும் காணோமே?
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
07-மார்-202210:50:21 IST Report Abuse
sankaseshan இது ஒரு கட்சி, இதற்கு ஒரு சட்டத்திட்டம், கஷ்ட காலம் தாங்க முடியலைடா சாமி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X