லாரி மீது வேன் மோதல்

Added : மார் 07, 2022 | |
Advertisement
கோவை:கோவையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் நிசார் அலி, 35. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பழைய ஆம்னி வேன் வாங்கி உள்ளார். காரில் நிசார் அலி மற்றும் நண்பர் ராமச்சந்திரன் குடும்பத்துடன், கேரளா மாநிலம் கோழிக்கோடு சென்றுள்ளனர்.சுற்றுலா முடித்துவிட்டு நேற்று காலை கோழிக்கோட்டிலிருந்து பாலக்காடு,
 லாரி மீது வேன் மோதல்

கோவை:கோவையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் நிசார் அலி, 35. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பழைய ஆம்னி வேன் வாங்கி உள்ளார். காரில் நிசார் அலி மற்றும் நண்பர் ராமச்சந்திரன் குடும்பத்துடன், கேரளா மாநிலம் கோழிக்கோடு சென்றுள்ளனர்.சுற்றுலா முடித்துவிட்டு நேற்று காலை கோழிக்கோட்டிலிருந்து பாலக்காடு, வாளையாறு வழியாக கோவைக்கு வந்து கொண்டிருந்தபோது, க.க.சாவடி அருகே சாலையின் ஓரத்தில் நின்ற லாரி மீது கார் மோதியது. இதில், மித்திரன்,5, சஞ்ஜூஸ்ரீ, 7 ஆகிய இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்தில் இறந்தனர். நான்கு பெண்கள் உட்பட ஏழு பேர் படுகாயங் களுடன், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.க.க.சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X