இந்திய தேசிய கொடிக்கு மரியாதை; உக்ரைனில் இருந்து திரும்பியவர் நெகிழ்ச்சி

Updated : மார் 07, 2022 | Added : மார் 07, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
திருப்பூர்: 'உக்ரைனில் நம் நாட்டு தேசியக்கொடிக்கு மரியாதை கொடுக்கின்றனர்; பிரதமர் மோடியின் முயற்சியால் நாடு திரும்பியுள்ளோம்' என, திருப்பூர் மாணவர் தெரிவித்தார். திருப்பூர் திருமுருகன்பூண்டியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி; கட்டட ஒப்பந்ததாரர்; இவரது மகன் ஸ்ரீதர், 20, உக்ரைனில் மருத்துவப்படிப்பு படித்து வந்தார். அவர் அங்கிருந்து மத்திய அரசின் உதவியுடன், நேற்று

திருப்பூர்: 'உக்ரைனில் நம் நாட்டு தேசியக்கொடிக்கு மரியாதை கொடுக்கின்றனர்; பிரதமர் மோடியின் முயற்சியால் நாடு திரும்பியுள்ளோம்' என, திருப்பூர் மாணவர் தெரிவித்தார்.



latest tamil news



திருப்பூர் திருமுருகன்பூண்டியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி; கட்டட ஒப்பந்ததாரர்; இவரது மகன் ஸ்ரீதர், 20, உக்ரைனில் மருத்துவப்படிப்பு படித்து வந்தார். அவர் அங்கிருந்து மத்திய அரசின் உதவியுடன், நேற்று திருப்பூர் வந்தார்.

ஸ்ரீதர் கூறியதாவது: உக்ரைன் வடக்கு பகுதியில் பெரிய பாதிப்பு இல்லை. நம் நாட்டுக்கு வருவதற்கான முயற்சி மேற்கொண்டபோது, இந்திய துாதரக உதவியால், பாதுகாப்புடன் வெளியேற அனுமதிக்கப்பட்டோம்.நான் வசித்த பகுதியில் இருந்து, 40 பேர் உட்பட, 500 பேர் பஸ்சில் உக்ரைனில் இருந்து அண்டை நாடான ஹங்கேரிக்கு அழைத்து செல்லப்பட்டோம்.


latest tamil news




அங்கு காத்திருந்த இரண்டு விமானங்களில் டில்லிக்கு பாதுகாப்பாக அழைத்து வந்தனர். உக்ரைனில் நம் நாட்டு தேசியக்கொடியை காட்டினால், மரியாதை கொடுக்கின்றனர். இந்தியர்களுக்கு தேவையான உதவி செய்கின்றனர். பிரதமர் மோடியின் முழு முயற்சியால் நாங்கள் உயிருடன் நாடு திரும்பி உள்ளோம். மத்திய, மாநில அரசுகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar -  ( Posted via: Dinamalar Android App )
07-மார்-202220:38:54 IST Report Abuse
Kumar ஜெய் ஹிந்த்..
Rate this:
Cancel
Thirumal Kumaresan - singapore,சிங்கப்பூர்
07-மார்-202218:54:14 IST Report Abuse
Thirumal Kumaresan நல்ல பண்பாடு பாராட்டுக்கள் நண்பரே
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
07-மார்-202216:46:37 IST Report Abuse
sankaseshan உரக்க சொல்லுங்கள் திருட்டு திராவிடர்கள் காதில் விழட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X