ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே இருங்காட்டுக்கோட்டையில் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு சொந்தமான 'ரேஸ் டிராக்' உள்ளது. இங்கு இருசக்கர வாகன பந்தயங்கள், பயிற்சிகள் நடக்கும்.சென்னையைச் சேர்ந்த ஓட்டபந்தய வீரர்கள் சார்பில், சென்னை மாரத்தான் என்ற பெயரில், மாரத்தான் போட்டி நேற்று காலை நடந்தது. சென்னையில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.
கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் காதர்மொய்தீன், 41, என்பவர் பங்கேற்று, 10 கி.மீ., மாரத்தான் போட்டியில் ஓடினார். சில கி.மீட்டர் ஓடிய நிலையில், காதர்மொய்தீன் சோர்வடைந்து தண்ணீர் குடித்துள்ளார். அப்போது திடீரென மயக்கமடைந்து விழுந்தார். அருகில் இருந்தோர், தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள், நெஞ்சுவலி காரணமாக அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE