சென்னை: 'சரக்கு'கள் விலை உயர்வால், தமிழக அரசுக்கு கூடுதலாக 5,௦௦௦ கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதிகரித்து வரும் செலவினத்தை
சமாளிக்கும் பகீரத முயற்சியாக, 'டாஸ்மாக்' கடைகளில் நேற்று முதல், பீர் மற்றும் மது வகைகளின் விலை திடீரென உயர்த்தப்பட்டு உள்ளது. தமிழக அரசின் 'டாஸ்மாக்' நிறுவனம், 5,410 சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்கிறது. அவற்றில் தினமும் சராசரியாக, 100 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான வகைகள்
விற்பனையாகின்றன.
மது வகைகள் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை, மதிப்பு கூட்டு வரி வாயிலாக, அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. உதாரணமாக, 100 ரூபாய்க்கு மது விற்றால், 83 ரூபாயும்; பீர் வாயிலாக, 73 ரூபாயும் வருவாய்கிடைக்கிறது.கடந்த 2020 - 21ல் ஆயத்தீர்வை வாயிலாக, 7,821 கோடி ரூபாய்; மதிப்பு கூட்டு வரியால், 25 ஆயிரத்து 989 கோடி ரூபாய் என, மொத்தம் 33 ஆயிரத்து 810 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.இது, இம்மாதத்துடன் முடிவடைய உள்ள நடப்பு நிதியாண்டில், 35 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என தெரிகிறது.
நிதி நெருக்கடி
மது வகைகள் மீது விதிக்கப்படும் வரி வருவாயே, தமிழக அரசின் பல்வேறு சமூக நல திட்டங்களுக்கு முக்கிய நிதி ஆதாரமாக உள்ளது.ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், நிதி நெருக்கடியை சமாளிக்க, தமிழக அரசு, 2021ல் மது வகைகளின் விலையை உயர்த்த முடிவு செய்தது. பின், 2021 நவம்பர், டிசம்பரில் பெய்த கன மழை, கொரோனா மூன்றாம் அலை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட காரணங்களால், மது வகை விலை உயர்த்தும் முடிவு தள்ளிப்
போடப்பட்டு வந்தது.
தேர்தல் முடிந்த நிலையில், டாஸ்மாக் நிறுவனம், நேற்று முதல் பீர் மற்றும் மது வகைகளின் விலைகளை திடீரென உயர்த்திஉள்ளது.அதன்படி, பீர் விலை பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டது. சாதாரண மது வகை 180 மி.லி., 'குவார்ட்டர்' விலை 10 ரூபாயும்; நடுத்தர, உயர் ரக குவார்ட்டர், 20 ரூபாயும்; சாதாரண வகை 375 மி.லி., 'ஆப்' மது பாட்டில் 20 ரூபாயும்; 750 மி.லி., 'புல்' பாட்டில் 40 ரூபாயும் அதிகரித்துள்ளன.நடுத்தர மற்றும் உயர்ரக 'ஆப்' பாட்டில் 40 ரூபாயும்; 'புல்' பாட்டில் 80 ரூபாயும் உயர்ந்துள்ளன. இந்த விலை உயர்வால் மட்டும், அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 5,000 கோடி முதல் 6,000 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் என, மதிப்
பிடப்பட்டு உள்ளது.
விலை பட்டியல்
'மது வகைகளின் புதிய விலை பட்டியலை, 'குடி'மகன்கள் தெரிந்து கொள்ளும் வகையில், அனைத்து கடைகளின் முன்பும், விளம்பரம் செய்ய வேண்டும்' என ஊழியர்களுக்கு, டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது.நேற்று மதியம் கடை திறந்ததும் புதிய விலையுடன் சேர்த்து, கூடுதல் தொகையை ஊழியர்கள் வசூலித்தனர்.'குடி'மகன்களுக்கு விலை உயர்வு குறித்து தெரியவில்லை. இதனால் அவர்கள், ஊழியர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.
![]()
|
![]()
|
![]()
|
இதற்கு முன் எப்போது?
டாஸ்மாக் 11 நிறுவனங்களிடம் இருந்து மது வகைகளையும், ஏழு நிறுவனங்களிடம் பீர் வகைகளையும் கொள்முதல் செய்கிறது. தமிழகத்தில், 2020 பிப், 7ல், மது வகை விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு, 10 ரூபாயும்; பீர் விலை 10 ரூபாயும் உயர்த்தப்பட்டது. அதே ஆண்டு மே 7ல் மீண்டும் குவார்ட்டர் சாதாரண பாட்டிலுக்கு, 10 ரூபாயும்; நடுத்தர, உயர் வகை மது பாட்டிலுக்கு 20 ரூபாயும் விலை உயர்த்தப்பட்டது.