சென்னை: மார்ச் 18-ல் 2022--23 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

மார்ச் 19 அன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் தலைமை செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் நடைபெறும் என்றும் தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து மார்ச் 18 அன்று அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு செய்யப்படும். தமிழக பட்ஜெட் தாக்கல் செய்வதை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.