கொச்சி : 'நடிகை கடத்தப்பட்டு, பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதியளிக்க கூடாது' என கோரி நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை, கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2017 பிப்ரவரியில் கேரளாவில், பிரபல நடிகை ஒருவர், கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் திலீப் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். திலீப் தற்போது, 'ஜாமினில்' உள்ளார்.
![]()
|
வழக்கு , எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடந்தது வருகிறது. இதற்கிடையே, இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த அனுமதி கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திலீப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றப்பதிவு செய்யப்பட்டுவிட்டது.ஒரேயொரு சாட்சியிடம் மட்டும் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது.
தீர்ப்பு வழங்க வேண்டிய நிலையில், கூடுதல் விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதியளிக்க கூடாது' என, கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை, நீதிபதி கவுசர் எடப்பாகத் தள்ளுபடி செய்தார். இந்த வழக்கில் அனைத்து விசாரணையையும், ஏப்., 15க்குள் முடிக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.