இந்தியா மீது தடைவிதிப்பது மடத்தனம்; அமெரிக்க எம்.பி., பாய்ச்சல்

Updated : மார் 09, 2022 | Added : மார் 09, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
வாஷிங்டன்: ''நட்பு நாடான இந்தியா மீது, அமெரிக்கா பொருளாதார தடை விதிப்பது மிக மடத்தனமான செயலாக இருக்கும்,'' என, அந்நாட்டு எம்.பி., டெட் குருஸ் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அரசு, சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ராணுவ தளவாடங்களை விற்பனை செய்யும் நாடுகள், வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கிறது. இதன்படி ரஷ்யாவிடம் 'எஸ்-400' ஏவுகணை சாதனத்தை வாங்கிய துருக்கி
Extraordinarily Foolhardy, India, Defence Deal, Russia, Sanctions, US senator, இந்தியா, பொருளாதார தடை, மடத்தனம், அமெரிக்கா, எம்பி

வாஷிங்டன்: ''நட்பு நாடான இந்தியா மீது, அமெரிக்கா பொருளாதார தடை விதிப்பது மிக மடத்தனமான செயலாக இருக்கும்,'' என, அந்நாட்டு எம்.பி., டெட் குருஸ் தெரிவித்துள்ளார்.



அமெரிக்க அரசு, சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ராணுவ தளவாடங்களை விற்பனை செய்யும் நாடுகள், வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கிறது. இதன்படி ரஷ்யாவிடம் 'எஸ்-400' ஏவுகணை சாதனத்தை வாங்கிய துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அதுபோல, ரஷ்யாவிடம், 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, ஐந்து 'எஸ்-400' ஏவுகணை சாதனங்களை வாங்கும் இந்தியா மீதும் பொருளாதார தடை விதிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.



இந்நிலையில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் அடங்கிய வெளியுறவு குழுவின் கூட்டம் நடந்தது. இதில் குடியரசு கட்சி எம்.பி., டெட் குருஸ் பேசியதாவது: இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க, அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா மீது தடை விதிப்பது மிக மடத்தனமான செயலாக இருக்கும். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற ஓராண்டில், இந்தியா உடனான நல்லுறவு சீர்குலைந்துள்ளது.



latest tamil news

ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா ஐ.நா.,வில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என்பது, அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிப்பதற்கு மறைமுக காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால், இந்தியா மட்டுமின்றி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளும் தீர்மானத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதனால் இந்தியா மீது தடை விதிக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

Nachiar - toronto,கனடா
09-மார்-202218:50:45 IST Report Abuse
Nachiar இது ஏகாதிபத்ய வாதிகளின் அடக்கு முறைகளில் ஒன்று. இப்படி செய்தால் மற்ற நாடுகள் நடுநிலைமை வகிக்கவோ அமெரிக்கா பிரிட்டன் ஜெர்மனி போன்ற வல்லரசு மற்றும் வல்லரசாக நினைத்துக்கொள்ளும் நாடுகளுக்கு எதிராக பிற நாடுகள் செயல் படாமல் இருக்க எடுக்கும் நடவடிக்கை. இப்போ அமெரிக்கா சீனாவுடன் டீல் போட்டுக் கொண்டுள்ளது. அமெரிக்கா தள்ளி வைத்த வெனிசுவேலாவின் கதவுகளை இப்போ தட்டிக் கொண்டுள்ளது. அமெரிக்கா தள்ளிவைத்த சவுதியின் காலடிக்கும் சென்றுள்ளது. ஈரான் கதவுகளையும் தட்டலாம் போல் உள்ளது. டிரம்ப் தலைவராக இருந்து இருந்தால் இந்த போர் நடந்திருக்காது ஏனென்றால் நேட்டோவை கலைக்க வேண்டிய காரணங்களை உரத்து சொன்னவர் டிரம்ப். நேட்டோவில் இருந்து விலகுவததிற்கும் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருந்தார் மேலும் . அமெரிக்கா தலைவர் தேர்தல் நேரத்தில் பைடன் குடும்பத்திற்கு உக்ரைனில் இருக்கும் பாரிய முதலீடுகள் அதைச் சுற்றிய சட்ட முறைகேடுகள் வெளிவந்தன அனால் இப்பொழுது இதை பேசுவாரும் இல்லை. பைடன் உக்ரனை நேட்டோவில் சேர்க்க முழக்கம் இட்டு இருக்காவிட்டால் இந்த போர் வந்திருக்காது என்பது என் பார்வை. இந்தியா சரியான முடிவையே எடுத்துள்ளது. தொடர்ந்தும் இந்திய தலை நிமிர்ந்துநிற்க வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Manivasagam - Chennai,இந்தியா
09-மார்-202216:29:34 IST Report Abuse
Manivasagam கட்டிப்பிடி வைத்தியம் செய்வாரா ? அது இனிமேல் எடுபடுமா?
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
09-மார்-202218:10:24 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANசமச்சீர் டியர் இந்தியா மீது தடை விதிக்கப்பட்டால் அதில் பாதிக்கப்படப் போவது நீயும்தான்...
Rate this:
RAMESH - chennai,இந்தியா
09-மார்-202219:14:24 IST Report Abuse
RAMESHஇதை போல நிறைய கதறல், piles, புலம்பல் சத்தம் கேட்கும்....
Rate this:
Cancel
Fastrack - Redmond,இந்தியா
09-மார்-202215:19:58 IST Report Abuse
Fastrack பட்டமேற்படிப்பு படித்த ஒரே நாட்டு மக்கள் இந்திய மக்கள் ..அவர்களின் குழந்தைகள் படிப்பில் சுட்டி ..உப ஜனாதிபதி முதல் பெரிய நிறுவனங்கள் இந்திய வம்சவாளியார் தலைமையில் ..எல்லா சூப்பர் மார்க்கெட்டிலும் மஞ்சள் இஞ்சி கொத்தமல்லி வியாபாரம் இந்தியர்களை நம்பி ...ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதில் இந்திய வம்சாவளியினர் வாக்குகள் பெரும்பங்கு வகிக்கின்றன ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X