பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

Updated : மார் 09, 2022 | Added : மார் 09, 2022 | கருத்துகள் (46) | |
Advertisement
புதுடில்லி: ராஜிவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்ற பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.ராஜிவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். கடந்தாண்டு மே 28ம் தேதி பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது. அப்போதிருந்து தொடர்ந்து அவருக்கு பரோல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பரோலுக்கு சில
பேரறிவாளன், ஜாமின், உச்சநீதிமன்றம்

புதுடில்லி: ராஜிவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்ற பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ராஜிவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். கடந்தாண்டு மே 28ம் தேதி பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது. அப்போதிருந்து தொடர்ந்து அவருக்கு பரோல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பரோலுக்கு சில கட்டுப்பாடுகள் இருப்பதால், சுதந்திரமாக வெளியே செல்ல முடியவில்லை, அதனால் தனக்கு ஜாமின் வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வில் இன்று (மார்ச் 9) விசாரணைக்கு வந்தது. இதில், பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் வாதுரை: ஏற்கனவே பேரறிவாளனுக்கான மரண தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது. தற்போது மீண்டும் அவருக்கு ஒரு சலுகை வழங்கி அவரை சிறையில் இருந்து விடுவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பேரறிவாளன் தனக்கான வாய்ப்பை ஏற்கனவே பயன்படுத்தி விட்டார். இரண்டாவது வாய்ப்பு கிடையாது.


latest tamil news


பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் தீர்மானம் மீது கவர்னர் முடிவெடுக்க முடியாது. அது ஜனாதிபதியின் அதிகாரம். ஜனாதிபதி மட்டும் தான் முடிவு எடுக்க முடியும். சம்மந்தப்பட்ட அரசு தான் ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது. இவ்வாறு மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு நீதிபதி, ‛219 பாரா சொல்வதுபடி அது மாநில அரசான தமிழக அரசு தான்' எனக் கூறினார். இதற்கு பதிலளித்த வழக்கறிஞர், ‛இல்லை, அது மத்திய அரசு' எனக் குறிப்பிட்டார்.


latest tamil news


பின்னர் நீதிபதி கூறுகையில், ‛நீங்கள் (மத்திய அரசு) இதில் மிகவும் தாமதம் செய்கிறீர்களே. சம்மந்தப்பட்ட நபரான பேரறிவாளன் 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார். இன்னும் தாமதம் செய்வதை எப்படி ஏற்பது? அவரின் விடுதலைக்கு யாருக்கு அதிகாரம் என்பதை பின்னர் விசாரிக்கலாம். தற்போது ஜாமின் தருவது பற்றியே வழக்கு விசாரணை நடக்கிறது. பரோலில் இருக்கும் பேரறிவாளன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை' எனக் கூறியதுடன், பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்குவதாக உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan -  ( Posted via: Dinamalar Android App )
10-மார்-202208:33:06 IST Report Abuse
Rajan [10/03, 08:25] Raaja: பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கிய உச்சநீதி மன்றத்துக்கு கண்டனம் தெரிவிக்க தைரியம் இருக்கா தமிழக காங்கிரசுக்கு? வைகோ, திருமா, முத்தரசன், வீரம்ணி, போன்ற விடுதலைப்புலி ஆதரவு நிலையை கொண்டுள்ள இந்த கும்பலுடன் இன்னும் கூட்டணியில் ஒப்டிக் கொண்டுள்ள காங்கிரசாருக்கு இதைக் காட்டிலும் பெரிய அவமானம் வேறு எதுவும் இல்லை. சிறிதளவும் சொரனையே கிடையாதா? என்ன செய்வது விடியல் அரசை விட்டால் வேறு போக்கிடம் இல்லை. அற்புதம் அம்மாள் கூட TWEET செய்கிறார்களாம் அரசுக்கு நன்றி தெரிவித்து. அந்த அம்மா பாவம் அவங்கள வைத்தும் அரசியல் ஆதாயம் தேடுகிறது புலி ஆதரவு கும்பல். பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியது போல் மற்ற ஆறு பேருக்கும் வழங்க வேண்டும். முப்பது வருடங்களாக சிறையில் உள்ளனர். Prime accused சிவராசன் இறந்து விட்ட நிலையில் தெரிந்தோ தெரியாமலோ ராஜீவ் கொலைக்கு உடந்தையாக இருந்த இந்த ஏழு பேரை இவ்வளவு வருடங்கள் சிறையில் வைத்து அரசு செலவில் உணவு அளித்தது போதும். அவர்கள் வாழ்நாளில் பெரும்பகுதி சிறையில் கழிந்துவிட்ட நிலையில் மீதமுள்ள நாட்களை அவர்கள் வெளியுலகத்தில் வாழ அனுமதிக்க வேண்டும். ரிமோட்டுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்தான் என்பதற்காக ஒருவனுக்கு வாழ்நாள் சிறையா? ஒரு கைதிக்கு உணவு உடை வழங்க 30 வருடங்களுக்கு 30 லட்சம் ஆவது செலவு ஆகாதா. இன்னும் செலவு செய்ய வேண்டுமா?
Rate this:
Cancel
sadasivan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-மார்-202203:34:59 IST Report Abuse
sadasivan Why judge not added massage for him? Judges also will loose their dignity and safer life likely police.
Rate this:
Cancel
activeindian - Chennai,இந்தியா
10-மார்-202202:28:56 IST Report Abuse
activeindian Why only release the ers of our former Primeminister Rajiv Gandhi. Release all those who are in jail for more than 25 years. Supreme Court should collect all those names and issue a blanket release order.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X