தோல்விக்கு காரணம் என்ன?; ‛தும்பை விட்டு வாலைப்பிடிக்கும்'' காங்., தலைவர்கள்

Updated : மார் 10, 2022 | Added : மார் 10, 2022 | கருத்துகள் (38) | |
Advertisement
புதுடில்லி சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். தோல்வி குறித்து ஆய்வு இது தொடர்பாக அக்கட்சியின் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கூறியதாவது: எங்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக 5 மாநில தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. ஆனால், அதனை ஏற்று கொள்கிறோம். நாங்கள் மக்களின் ஆசியை பெற தவறிவிட்டோம். தேர்தல் முடிவுகள்
CONGRESS, UP, UTTARKHAND, PUNJAB, GOA, CHIDAMBARAM RANDEEP SURJEWAALA, DINESH KUNDURAO, HARISH RAWAT,

புதுடில்லி சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.


தோல்வி குறித்து ஆய்வு


latest tamil news


இது தொடர்பாக அக்கட்சியின் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கூறியதாவது: எங்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக 5 மாநில தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. ஆனால், அதனை ஏற்று கொள்கிறோம். நாங்கள் மக்களின் ஆசியை பெற தவறிவிட்டோம். தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய விரைவில் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை கூட்ட சோனியா முடிவு செய்துள்ளார். பஞ்சாபில், அம்மாநில மண்ணின் மைந்தன் சரண்ஜித் சிங் சன்னி மூலம் புதிய தலைமையை அளித்தோம். ஆனால், அதற்கு முந்தைய அமரீந்தர் சிங்கின் 4.5 ஆண்ட ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு நிலையில் இருந்து எங்களால் வெளியே வர முடியவில்லை. இதனால், ஓட்டு மூலம் மக்கள் ஆம் ஆத்மியை தேர்வு செய்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


பொறுப்பேற்பு


latest tamil news


உத்தரகண்ட் முதல்வர் வேட்பாளர் ஹரீஸ் ராவத் கூறுகையில், பொது மக்கள் மனங்களை வெல்ல எங்களது முயற்சிகள் குறைவாகவே இருந்தன. மக்கள் மாற்றத்திற்கு ஓட்டு போடுவார்கள் என்பதில் உறுதியாக இருந்தோம். எங்களின் முயற்சியில் குறை இருந்திருக்க வேண்டும். எதை ஏற்று கொண்டு தோல்விக்கு பொறுப்பேற்கிறேன். பிரசார திட்டமிடல் போதுமானதாக இல்லை. பிரசார குழு தலைவர் என்ற முறையில் அதற்கு பொறுப்பு ஏற்கிறேன். தொண்டர்கள் சிறப்பாக பணியாற்றினர். அதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மக்களின் நம்பிக்கையை என்னால் பெற முடியவில்லை. ஆனால், எனது மகளையும், வெற்றி பெற்றவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்க விரும்புகிறேன். என்னை பொறுத்த வரை முடிவுகள் ஆச்சர்யமளிப்பதாக உள்ளது. பணவீக்கம் அதிகமாக இருந்த போதும், மக்களின் முடிவு என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மக்களின் முடிவு இது தான் என்றால், பொது நலன் மற்றும் சமூக நீதிக்கான விளக்கம் என்ன. இந்த முடிவுக்கு பிறகும், பா.ஜ.,ஜிந்தாபாத்' என்ற கோஷத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


ஓட்டுகள் பிரிந்தன


latest tamil news


கோவா பொறுப்பாளரும் முன்னாள் நிதியமைச்சருமான சிதம்பரம் கூறியதாவ: கோவா மக்களின் முடிவுகளை ஏற்று கொள்கிறோம். பல தடைகளை தாண்டி எங்களது வேட்பாளர்கள் தைரியமாக போட்டியிட்டனர். பா.ஜ., ஆட்சியமைக்க மக்கள் ஓட்டு போட்டனர். இதனை ஏற்று கொள்கிறோம். பல தொகுதிகளில் குறைந்தளவு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உள்ளோம். பல கட்சிகள் இடையே ஓட்டுகள் பிரிந்தது, எங்களின் எதிர்பார்ப்புகள் குறைய காரணமாகியது. 33 சதவீத ஓட்டுகள் மட்டும் தான் பா.ஜ.,விற்கு கிடைத்தது. மற்ற ஓட்டுகள் பிரிந்தன. இவ்வாறு அவர் கூறினார்.


முக்கிய பங்கு


latest tamil newsதினேஷ் குண்டுராவ் கூறுகையில், தேர்தல் முடிவுகள் ஏமாற்றமளிக்கின்றன. சிறப்பான இடம் பிடிப்போம் என எதிர்பார்த்தோம். பொறுப்பான எதிர்க்கட்சியாக பணியாற்றுவோம். சட்டசபைக்கு வெளியேயும் உள்ளேயும் எதிர்க்கட்சிக்கு முக்கிய பங்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Bala - tamilnadu,இந்தியா
11-மார்-202212:43:04 IST Report Abuse
S.Bala இங்கு அழகிரி ஒரு மானஸ்தர் இருந்தார் நேற்றிலிருந்து காணவில்லை ?
Rate this:
Cancel
11-மார்-202207:34:38 IST Report Abuse
பேசும் தமிழன் தோல்விக்கு.. இத்தாலி போலி காந்தி கும்பல் தான் காரணம் என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும்.... ஆனால் கண்ணை மூடி கொண்டு இருக்கும் உங்களுக்கு தெரிய வாய்பில்லை
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
11-மார்-202205:41:51 IST Report Abuse
Ramesh Sargam தோல்விக்கு காரணம் என்ன? ராகுல், பிரியங்கா போன்ற அரசியலில் முதிர்ச்சி இல்லாதவர்களிடம் காங்கிரஸ் தலைமையை கொடுத்ததுதான் காரணம். போதாதற்கு பஞ்சாப் போன்ற மாநிலங்களில் சித்து போன்ற கோமாளிகளை நம்பியதுதான். காங்கிரஸ் கட்சியின் இந்த படுமட்டமான தோல்விக்கு காங்கிரஸ் காரர்களேதான் காரணம். வேறு யாருமல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X