அனைவருக்கும் வேலை தரும் கல்வி அவசியம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Added : மார் 12, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
கோவை: ''அனைவருக்கும் வேலை தரும் கல்வியை வழங்குவதில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.இந்திய பல்கலைகள் கூட்டமைப்பின் தென் மண்டல துணைவேந்தர் சந்திப்பு கூட்டம், கோவையில் நேற்று துவங்கியது; இன்று நிறைவடைகிறது. நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் காணொலியில் பேசியதாவது: தரமான உயர் கல்வி வழங்குவதில் மற்ற
அனைவருக்கும் வேலை தரும் கல்வி அவசியம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கோவை: ''அனைவருக்கும் வேலை தரும் கல்வியை வழங்குவதில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இந்திய பல்கலைகள் கூட்டமைப்பின் தென் மண்டல துணைவேந்தர் சந்திப்பு கூட்டம், கோவையில் நேற்று துவங்கியது; இன்று நிறைவடைகிறது. நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் காணொலியில் பேசியதாவது: தரமான உயர் கல்வி வழங்குவதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன் உதாரணமாக உள்ளது. தேசிய நிறுவனங்களுக்கான தரவரிசையில் தமிழகத்தின், 19 பல்கலைகள், 33 கல்லூரிகள் முதல், 100 இடங்களை பிடித்துள்ளன.



தேசிய அளவில் உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கை விகிதம், 27.1 சதவீதமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் இது, 51.4 சதவீதமாக உள்ளது. தேசிய சராசரியை விட இது இரு மடங்கு அதிகம். தமிழகத்தில், 17 மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் உள்ளனர். தொழிற்கல்வி, மருத்துவப் படிப்புக்கு, 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது.



பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு என தனி பல்கலைக்கழகம், உதவித்தொகை. அகில இந்திய பயிற்சி, வேலைவாய்ப்பு கம்ப்யூட்டர் பயிற்சி உள்ளிட்ட சிறப்பு திட்டங்கள் உள்ளன. பெண்ணுரிமைக்கு முன்னுரிமை அளித்து, நாட்டுக்கே முன்மாதிரியாக தமிழகம் உள்ளது. உயர்கல்விக்கு 2021 - -22ம் ஆண்டில், ரூ.5,369 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொழிற்கல்வி பாட நூல்களை தமிழில் மொழிமாற்றம் செய்ய ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.



பல்கலைகள் பெரும்பாலும், பட்டதாரிகளை உருவாக்குவதும், முனைவர் பட்டங்களை வழங்குவதிலும், தேசிய, உலகளவில், தரவரிசை பெறுவதற்காகவும் பணிபுரிந்து வருகின்றன. ஆனால், இந்திய உயர்கல்வியின் முக்கிய குறிக்கோளான, அனைவருக்கும் வேலை தரும் கல்வியை வழங்குவதில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.



திறன்சார்ந்த கல்வி, பயிற்சி பாடத்திட்டத்தில் கட்டாயப்படுத்துவது அவசியம். நீங்கள் அனைவரும் அறிவியல் பூர்வமான சிந்தனைகளை மாணவர்களிடம் வளர்க்க வேண்டும். மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி, பிற்போக்கு கருத்துகளை பாடத்திட்டத்தில் புகுத்தும் போக்கு கவலை அளிக்கிறது. கல்வியை முழுமையாக மாநில பட்டியல் மாற்றினால் தான் இதற்கு தீர்வு.மாநிலத்தின் கல்வி கொள்கை அடிப்படையில் பல்கலைக்கழகம் செயல்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பம். இதை உணர்ந்து துணைவேந்தர்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து (7)

Vittal Anand - Chennai,இந்தியா
12-மார்-202217:21:18 IST Report Abuse
Vittal Anand அன்று காமராஜர் சொன்ன பொழுது குதித்தார்களே
Rate this:
Cancel
Vittal Anand - Chennai,இந்தியா
12-மார்-202217:16:44 IST Report Abuse
Vittal Anand அன்று காமராஜர் சொன்ன போது
Rate this:
Cancel
... - ,
12-மார்-202215:09:36 IST Report Abuse
... எழுதி குடுத்ததை யே தப்பு படிக்கிற நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X