புதுடில்லி:இந்தாண்டு நடக்கவுள்ள ஹிமாச்சல் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வெல்லும் என அக்கட்சி மூத்த தலைவர் தெரிவித்தார்.
நடந்து முடிந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில், ஆம் ஆத்மி 92 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாகி ஆட்சியை பிடித்து உள்ளது. கோவாவிலும் மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து இந்தாண்டு நடக்க உள்ள ஹிமாச்சல் சட்டசபை தேர்தலிலும் களம் காண ஆம் ஆத்மி வியூகம் வகுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று ஹிமாச்சலில் மெகா பேரணியை நடத்தியது ஆம் ஆத்மி கட்சி.
![]()
|
இது குறித்து டில்லி ஆம் ஆத்மி கட்சி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயி்ன் நிருபர்களிடம் கூறியது, ஹிமாச்சல் பிரதேச சட்டசபைக்கு இந்தாண்டு நவம்பரில் தேர்தல் நடக்கிறது. பஞ்சாப் தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஹிமாச்சலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்றார்.