கொழும்பு:இலங்கையில், 100 மெகா வாட் சூரிய மின் சக்தி திட்டத்தை செயல் படுத்துவதற்காக, அந் நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் திரிகோணமலையில், 100 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசிய அனல் மின் நிறுவனமும், இலங்கையின் சிலோன் மின் வாரியமும் இணைந்து திரிகோணமலை மின் நிறுவனம் வாயிலாக, சம்பூரில் சூரிய மின் சக்தி திட்டத்தை செயல்படுத்த உள்ளன; இதற்கான ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.