காங்கிரசில் இருந்து ஏன் நீக்கக்கூடாது? அமெரிக்கை நாராயணனுக்கு 'நோட்டீஸ்!'

Added : மார் 13, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
சென்னை:காங்கிரஸ் தலைமையை கடுமையாக விமர்சித்த, தமிழக காங்., செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணனிடம், 'கட்சியில் இருந்து உங்களை ஏன் நீக்கக் கூடாது' என, மாநிலத் தலைமை விளக்கம் கேட்டுள்ளது.சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், நான்கு மாநிலங்களில் பா.ஜ.,வும், ஒரு மாநிலத்தில் ஆம் ஆத்மியும் ஆட்சியை பிடித்தன. காங்கிரஸ்படுதோல்வியை சந்தித்தது. முடிவுகள் வெளியான
 காங்கிரசில் இருந்து ஏன் நீக்கக்கூடாது? அமெரிக்கை நாராயணனுக்கு 'நோட்டீஸ்!'

சென்னை:காங்கிரஸ் தலைமையை கடுமையாக விமர்சித்த, தமிழக காங்., செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணனிடம், 'கட்சியில் இருந்து உங்களை ஏன் நீக்கக் கூடாது' என, மாநிலத் தலைமை விளக்கம் கேட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், நான்கு மாநிலங்களில் பா.ஜ.,வும், ஒரு மாநிலத்தில் ஆம் ஆத்மியும் ஆட்சியை பிடித்தன. காங்கிரஸ்படுதோல்வியை சந்தித்தது. முடிவுகள் வெளியான பின், 'தேர்தல் தோல்விக்கு காங்., தலைமையே காரணம்' என, தமிழக காங்., செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் குற்றம் சாட்டினார்.

அதைத் தொடர்ந்து, அவருக்கு தமிழக காங்., தலைவர் அழகிரி அனுப்பியுள்ள நோட்டீஸ்: காங்கிரசின்கொள்கைகள் மற்றும் தலைமை குறித்து, உள்ளரங்குகளில் கூற வேண்டிய கருத்துக்களை, பொதுவெளியில் ஊடகங்கள் வழியாக கூறி வருகிறீர்கள். சமீபத்தில் காங்., தலைமைக்கு எதிராக நீங்கள் கூறிய கருத்துக்கள், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதன் அடிப்படையில், தங்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்பதற்கு, இக்கடிதம் கிடைத்த ஒரு வாரத்திற்குள் விளக்கம் தெரிவிக்க வேண்டும்.அப்படி தெரிவிக்கவில்லை என்றால், உங்களிடம் விளக்கம் பெற ஏதுமில்லை எனக்கருதி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரை, 'டிவி' விவாதங்களில், காங்கிரஸ் சார்பில் பங்கேற்க அழைக்க வேண்டாம் என்றும் அழகிரி தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KMP - SIVAKASI,இந்தியா
15-மார்-202216:41:26 IST Report Abuse
KMP கரைந்து கொண்டே வருகிறது காங்கிரஸ் கட்சி ? காணாமல் போகாமல் இருந்தா சரி
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
15-மார்-202209:20:33 IST Report Abuse
madhavan rajan காங்கிரசுக்கு நற்பெயரா? நற்பெயருக்கே இந்த அடின்னா ....... அழகிரியின் காமெடிக்கு அளவே இல்லையா?
Rate this:
Cancel
sankar - ghala,ஓமன்
14-மார்-202211:50:01 IST Report Abuse
sankar அமெரிக்கா நாராயணனுக்கு உண்மை பேச தையிரியம் இருக்கு , அழகிரி தி மூ க விக்கு ஜால்ரா அடிக்கும் நபர் , காங்கிரெஸ்ஸை தி மூ க விடம் அடமானம் வைத்து விட்டார் இந்த அழகிரி ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X