ராணுவ தளம் மீது ரஷ்ய படைகள் குண்டு வீச்சு: உக்ரைனில் 35 பேர் பலியான பரிதாபம்

Updated : மார் 14, 2022 | Added : மார் 14, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
லீவ்,-உக்ரைன் - போலந்து எல்லைப் பகுதியில் அமைந்துள்ள உக்ரைன் ராணுவ தளம் மீது, ரஷ்ய படையினர் குண்டுகளை வீசி நடத்திய தாக்குதலில், 35 பேர் உயிரிழந்தனர்; 134 பேர் காயமடைந்தனர்.'நேட்டோ' எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் இணைய, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் விரும்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, உக்ரைன் எல்லைப்

லீவ்,-உக்ரைன் - போலந்து எல்லைப் பகுதியில் அமைந்துள்ள உக்ரைன் ராணுவ தளம் மீது, ரஷ்ய படையினர் குண்டுகளை வீசி நடத்திய தாக்குதலில், 35 பேர் உயிரிழந்தனர்; 134 பேர் காயமடைந்தனர்.'நேட்டோ' எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் இணைய, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் விரும்பியது.latest tamil newsஇதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, உக்ரைன் எல்லைப் பகுதியில் 1.50 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை நிறுத்தியது.ஆக்கிரமிக்கும் முயற்சிகடந்த 24ம் தேதி முதல், உக்ரைன் மீது ரஷ்ய ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். நாட்டின் பிரதான நகரங்களை ஆக்கிரமிக்கும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.குடியிருப்பு கட்டடங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்கள் மீதும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதால், தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

ரஷ்ய படையினருக்கு உக்ரைன் ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.ரஷ்ய படைகளின் தாக்குதலில் இருந்து உயிர் பிழைக்க, ஏராளமான மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியே வருகின்றனர். இதுவரை 26 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேறி உள்ளதாக தகவல்கள் கிடைத்து உள்ளன. இதைத்தவிர, ஏராளமானோர் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்து உள்ளனர்.இதற்கிடையே உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது, அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள், கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.மேலும், உக்ரைனுக்கு உதவும் வகையில், ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை வழங்கி வருகின்றன.

இந்த உதவிகள போலந்து வழியாக, உக்ரைனுக்கு அனுப்பப்படுகின்றன.இந்நிலையில், உக்ரைன் - போலந்து எல்லைப் பகுதியில் லீவ் ஆப்லாஸ்ட் மாகாணத்தில் அமைந்துள்ள ராணுவ பயிற்சி தளத்தில் நேற்று குண்டுகளை வீசி, ரஷ்ய படையினர் வான்வழித் தாக்குதல்களை நடத்தினர்.இந்த கொடூரமான தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 134 பேர் காயமடைந்துள்ளதாகவும் மாகாண கவர்னர் மேக்சிம் கோஜிட்ஸ்கி தெரிவித்துஉள்ளார்.ஏவுகணை தாக்குதல்இந்த ராணுவ தளத்தில் நேட்டோ நாடுகளின் ராணுவத்தினர் கடந்த காலங்களில் கூட்டு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் கீவ் மீது ஏவுகணைகளை வீசி, தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கீவ் நகரை மிகவும் நெருங்கி விட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்து உள்ளது. இதையடுத்து தலைநகரை ரஷ்ய படையினர் கைப்பற்றாமல் இருப்பதை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை, உக்ரைன் ராணுவத்தினர் எடுத்து வருகின்றனர்.இதற்கிடையே, டோனட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஒரு குழந்தைகள் விடுதி மற்றும் மடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 32 பேர் காயமடைந்துள்ளனர்


latest tamil news


.இதேபோல் இர்பின் பகுதியில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்தார்.குண்டுவீச்சு: 7 பேர் பலிஉக்ரைன் தலைநகர் கீவுக்கு அருகில் உள்ள பெரேமோஹா என்ற கிராமத்தில் இருந்து ஏராளமான மக்கள் வெளியேறி வருகின்றனர். நேற்று, அவர்கள் சென்ற வாகனங்கள் மீது ரஷ்ய ராணுவத்தினர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்; ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர். அதிபர் குற்றச்சாட்டுஉக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று கூறியதாவது:உக்ரைனை பிளவுபடுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், எங்கள் நாட்டு மக்களை, கிளர்ச்சியாளர்களாக மாற்ற, ரஷ்யா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஏற்கனவே நாட்டின் கிழக்குப் பிராந்தியத்தில் கிளர்ச்சியாளர்களை விட்டு வன்முறைகளை கட்டவிழ்த்த ரஷ்யா, தற்போது மேலும் பலரை சொந்த நாட்டிற்கு எதிராகவே களம் காண வைக்க முயற்சிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

தாய் - மகளுக்கு நேர்ந்த கதிஉக்ரைனின் கீவில், நேற்று, உடல்நலன் பாதிக்கப்பட்ட தன் தாய்க்கு மருந்து வாங்குவதற்காக, வலேரியா மக்சேட்ஸ்கா என்ற பெண், தாய் ஐரினா, கார் டிரைவர் யாரோஸ்லாவ் ஆகியோருடன் சேர்ந்து, வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.காரில் சென்றபோது, தொலைவில் இருந்து அதை கவனித்த ரஷ்ய படையினர், கார் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தினர். இதில் அவர்கள் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - madurai,இந்தியா
14-மார்-202211:40:33 IST Report Abuse
தமிழன் இங்கே நாம் அறிந்து கொள்ளவேண்டிய பாடங்கள். மொத்த ஐரோப்பாவும், அமெரிக்காவும் துணை நின்று என்ன பயன்? நட்பு நாடுகள் தொலைவில் நின்று வடிவேலு போல் கபடி தான் ஆடும். அவர்கள் செய்தது இரண்டே விஷயம், ஒன்று ருசியா மீது பொருளாதார தடை விதித்தது, அதனால் உக்ரேனிற்கு இன்றய நிலையில் எந்த பயனும் இல்லை, தவிர நாளை அந்த தடைகளை பல அரசியல் காரணங்கள் கூறி படிப்படியாக எடுத்துவிடும். இரண்டு உக்ரேனிற்கு ஆயுதங்கள் வழங்குவது, அதுவும் அந்த நாட்டிற்கு போதவில்லை. அந்த நட்பு நாடுகளில் எந்த நாடாவது ஒரு ஏவுகணை விட்டாவது ருசியாவை தாக்கியதா? சிரியா, ஆப்கன் போன்ற சொத்தை நாடுகள் என்றால் செய்திருக்கும். இதற்கு தான் நாமே நம்மை காத்துக்கொள்ள வேண்டும் என்பது. நம் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் மோடி தான் சரிப்பட்டு வருவார்.
Rate this:
mohan - chennai,இந்தியா
14-மார்-202213:20:06 IST Report Abuse
mohanஜெலன்ஸ்கி, சூழ்ச்சி வலையில் சிக்கி விட்டார்...ரஸ்யா , படைகளை காரணம் இல்லாமல் குவிக்காது.. என்றும், கண்டிப்பாக தாக்குதல் நாடாகும், என்றும் அமேரிக்கா சொன்னது.. அப்பொழுதாவது உக்ரைன் விழிப்படைத்திருக்க வேண்டும்... இப்பொழுது காலம் கடந்து போய் விட்டது..என்ன செய்ய....போர் நின்றாலும் எவ்வளவு பாதிப்புகள், எவ்வளவு அலைக்கழிப்புகள், சாதாரண மனிதர்கள், அவர்கள் வேலை செய்கிறார்கள், சாப்பிடுகிறார்கள், இடையில் இந்த போர் எதற்காக.......
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
14-மார்-202210:49:11 IST Report Abuse
Anand அமெரிக்காவின் நயவஞ்சகத்திக்கு உக்ரைன் ஆளாகிவிட்டது, இது அப்படியே தொடர்ந்து பற்றி அமெரிக்காவையே துவம்சம் ஆக்கும்...வினை விதைத்தவன் வினையை அறுப்பான்.
Rate this:
Cancel
mohan - chennai,இந்தியா
14-மார்-202209:55:00 IST Report Abuse
mohan உலகத்தில் ஒரு சிலர் லட்சக்கணக்கான கோடிகளுடன் வாழ்வதற்கு, இவ்வாறு போர்கள் நடத்த படுகின்றன....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X