அமெரிக்க துாதரகம் மீது ஏவுகணை வீசி தாக்குதல்

Updated : மார் 14, 2022 | Added : மார் 14, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
பாக்தாத்-ஈராக்கில் உள்ள அமெரிக்க துாதரகத்தின் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.இந்நிலையில், நேற்று ஈரானின் அண்டை நாடான ஈராக்கின் இர்பில் நகரில் உள்ள அமெரிக்க துாதரகத்தை குறிவைத்து, ஏவுகணை தாக்குதல்கள்

பாக்தாத்-ஈராக்கில் உள்ள அமெரிக்க துாதரகத்தின் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.latest tamil news


அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.இந்நிலையில், நேற்று ஈரானின் அண்டை நாடான ஈராக்கின் இர்பில் நகரில் உள்ள அமெரிக்க துாதரகத்தை குறிவைத்து, ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.இது குறித்து, அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:வடக்கு ஈராக்கின் இர்பில் நகரில் அமைந்துள்ள அமெரிக்க துாதரகத்தின் மீது, 12க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.


latest tamil news


இந்த ஏவுகணைகள், அண்டை நாடான ஈரானில் இருந்து ஏவப்பட்டுள்ளன.எனினும், இந்த தொடர் தாக்குதல்களில் யாருக்கும் எந்த பாதிப்பும்ஏற்படவில்லை; உயிரிழப்புகள் எதுவும் இல்லை. கட்டடங்கள் மட்டும் சேதமடைந்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தாக்குதலில், அமெரிக்க துாதரகத்திற்கு அருகில் உள்ள ஒரு 'டிவி' சேனல் அலுவலகமும் சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு, அமெரிக்காவும் ஈராக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் குறித்து, விசாரணை துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அனைத்து விபரங்களும் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
14-மார்-202216:11:56 IST Report Abuse
மலரின் மகள் அமெரிக்கா ஒரு விதத்தில் மற்றவர்களிடம் மிரட்டல் பாணியில் பேசிப்பார்க்கிறது. நேட்டோ பொருளாதார தடை என்று. அதனிடம் மிகப்பெரிய கூட்டணி பலமும் ஐ நா போன்ற உலக அமைப்புக்களில் பெரும் ஆதரவு இருபித்தன்காவும் வெளிகாட்டிக்கொண்டு. அவர்களிடம் எப்படி பேசுவது கண்டனம் தெரிவிப்பது. தூதரக முறையிலான. அமெரிக்கா செய்வது டிப்ளமேடிக் என்று தெரியும்படி மறைந்திருந்துதான் அனைத்தையும் செய்கிறது. அவர்களுக்கு புரியவைக்கவும், நீ இப்படி செய்தால் எங்களால் இப்படி செய்யமுடியும் என்பதை புரிந்து கொள் என்று எதிர்தரப்பில் சொல்லப்படுகிறது. கண்ணுக்கு எதிரி தெரிந்தாலும் அவன் தான் இதை செய்தான் அவன் தான் என்று நிரூபிக்கமுடியாது. வெறும் சந்தேகங்களை எழுப்பி கொண்டிருக்கவேண்டியது தான், யுத்தத்திற்கு இறங்கினால் இரட்டை கோபுர தாக்குதல் போன்ற நிலைகளை அமெரிக்கா அறிந்திருக்கிறது என்று புரிய வைத்திருக்கிறார்கள், உலகம் அமைதியாகி நடைபோடவேண்டுமென்றால் அமெரிக்கா தங்கள் ஹதேசத்தை பார்த்து கொண்டு மட்டும் இருக்கவேண்டும். அல்லது அவர்களின் பொருளாதார ராணுவ பலம் நலிந்து போகவேண்டும். இரண்டும் இயலாத காரியமாக இருப்பதால், தடி எடுத்துதான் வழிக்கு கொண்டுவரமுடியும் என்று தீவிரவாத வழியில் செல்கின்றன சில தேசங்களும் அமைப்புக்களும். நேட்டோ தேசங்கள் அதாவது அமெரிக்கா தொழில் சுமந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை நிறைய போலந்து வழியாக உக்ரைனுக்குல் அனுப்புகிறது. போலந்து உக்ரைன் எல்லைப்பகுதியில் உக்ரைனில் நேட்டோவின் ராணுவ கூட்டு பயிற்சி தளம் இருக்கிறது. நேட்டோவின் அங்கத்தினராக இல்லாத தேசத்தில் நேட்டோவின் கூட்டு பயிற்சி மையம் எதற்காக. சாமானியர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ ரசியா ஈரான் போன்ற தேசங்களுக்கு நன்கு தெரியும். அமெரிக்காவிற்கு சில சங்கதிகளை சொல்வதற்கு இந்த ஏவுகணை தாக்குதல்கள் பயன்படுகிறது போல. உயிர்சேதம் வராமல் தாக்குதல் நேர்த்தியாக செய்யப்பட்டிருக்கிறது என்பது தாக்குதல் நடத்துவதற்கு அல்ல. அமெரிக்காவிற்கு செய்திகளை சொல்வதற்காகவே. அமேரிக்கா உக்ரைனில் அமைதி திரும்புவதற்கு அனுமதிக்கவேண்டும். அதை செய்யுமா?
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
14-மார்-202214:07:03 IST Report Abuse
Nellai tamilan அமெரிக்கா தனது பலத்தை இழந்து பல நாட்கள் ஆயிற்று. இருந்தும் பழைய நினைப்பில் இருக்கிறது
Rate this:
Cancel
canchi ravi - Hyderabad,இந்தியா
14-மார்-202214:06:32 IST Report Abuse
canchi ravi சூ என் லாய் சொன்னது நினைவுக்கு வருகிறது. அமெரிக்க மற்றும் சோவியத் யூனியன் எங்கு போட்டிஇட்டாலும் அங்கு அமைதி நிலவாது என்று. போர் ஆயுதங்களை விற்று சண்டை மூட்டுவது, தாங்கள் பணக்கார நாடு ஆவது. .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X