உள்ளாட்சி தேர்தலில் 99 சதவீதம் வெற்றி; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

Updated : மார் 14, 2022 | Added : மார் 14, 2022 | கருத்துகள் (34) | |
Advertisement
சென்னை: சமீபத்தில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக நூற்றுக்கு 99 சதவீதம் வெற்றிப் பெற்றுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற தி.மு.க., நிர்வாகி இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இதுவரை நானே கண்டிராத மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளோம். நூற்றுக்கு 99 சதவீதம் வெற்றியை
TamilnaduCM, Stalin, DMK, Urban, Local Body Election, Victory, தமிழகம், முதல்வர், ஸ்டாலின், திமுக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், வெற்றி, பெருமிதம்

சென்னை: சமீபத்தில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக நூற்றுக்கு 99 சதவீதம் வெற்றிப் பெற்றுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தி.மு.க., நிர்வாகி இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இதுவரை நானே கண்டிராத மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளோம். நூற்றுக்கு 99 சதவீதம் வெற்றியை பெற்றிருக்கிறோம். நம் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கைக்கு இந்த வெற்றி தான் சாட்சியாக உள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சியாக இருந்தாலும் தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றியுள்ளோம்.


latest tamil news


திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை எவ்வளவு இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதனை சமாளித்து, உலகளவிலேயே கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்திய மாநிலமாக தமிழகம் விளங்கிக்கொண்டிருக்கிறது. இது திமுக ஆட்சி மக்கள் பணியில் எவ்வளவு கவனம் செலுத்துகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும். குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் சூட்டுங்கள். தமிழகத்திற்கு பெருமை சேர்த்து தாருங்கள், தமிழர் என்ற உணர்வை கூறுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
15-மார்-202203:54:56 IST Report Abuse
BASKAR TETCHANA 99 சதவிகிதம் வெற்றி பெற்றாயா. எங்கே எப்போது. சொல்லவே இல்லை. விட்டால் 100 சதவிகிதம் வெற்றி பெற்றாய் என்று கூட சொல்லுவாய். எல்லாமே பணம். இன்னும் ஊரில் இருக்கிற காட்சிகளை ஒன்று சேர்த்து கொண்டாடு. எங்களை எதிர்க்க ஆல் இல்லை என்று கூட சொல்லி கோல். யார் வேண்டாம் என்றது. நான் கேட்கும் கேள்விகளுக்கு முதலில் பத்தி சொல். நோ.1 கிராமத்து சபையில் பேட்டி பெட்டியை மனு வாங்கினாயே அது எங்கே. பெண்களுக்கு ஆயிரம் ருஓப்பாய் எங்கே. காஸ் மானியம் எங்கே இன்னும் இருக்கிறது எனக்கு கை வலிக்கிறது.
Rate this:
Cancel
vijay - chennai ,இந்தியா
14-மார்-202221:02:59 IST Report Abuse
vijay If you have the power , Please stand alone and fight with other party .Then we will agree your percentage of victory . Don,t cheat the tamilnadu public .
Rate this:
Cancel
Truth Triumph - Coimbatore,இந்தியா
14-மார்-202219:50:13 IST Report Abuse
Truth Triumph அட டா தமிழகத்தில் இவ்வளவு புத்தி கூர்மையுள்ள வாக்காளர்களை பெற்றுள்ள ஒரே கட்சியா???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X