திருப்பூர்: ''அழியும் தன்மையுள்ள, 'மேஜிக் பேனா' பயன்படுத்தி, முறைகேடு செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என, கனிமவளத்துறை எச்சரித்துள்ளது.
தமிழக அரசின் கனிமவளத்துறை (புவியியல் மற்றும் சுரங்கத்துறை), மாவட்டம்தோறும், கல் கவாரி மற்றும் 'கிராவல்' மண் குவாரி அமைக்க, உரிமம் வழங்குகிறது. உரிமம் வழங்கியதன் அடிப்படையில், ஒவ்வொரு நாளும், கல் மற்றும் கிராவல் மண் எடுத்துச்செல்ல வேண்டிய அளவும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
உரிமதாரர், லாரிகள் மூலம், தினமும் லோடு ஏற்றிச்செல்ல வசதியாக, 'டிரிப் சீட்' வழங்கப்படுகிறது. மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள், ஒவ்வொரு நடைக்கும் பயன்படுத்தும், 'டிரிப் சீட்'டுகளில், லாரி சென்று வரும் துாரம், நேரம், தேதி விவரங்களுடன், அலுவலக முத்திரையுடன், 'டிரிப் சீட்' வழங்குகின்றனர்.நவீன தொழில்நுட்ப வசதியுடன் தயாரிக்கப்பட்ட, 'மேஜிக் பேனா'க்களை பயன்படுத்தி, 'டிரிப் சீட்'களில், முறைகேடு செய்து, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துகின்றனர்.
'டிரிப் சீட்'டில் எழுதிய பகுதியை வெயிலில் வைத்தால், எளிமையாக அழிந்துவிடும் வகையிலான, 'இங்க்' மூலம், 'மேஜிக்பேனா' தயாரிக்கப்படுகிறது.இத்தகைய பேனாக்களை பயன்படுத்தி, ஒரு 'டிரிப் சீட்'டில், நாள், தேதி, நேரத்தை மாற்றம் செய்து, ஒரு லோடு இயக்குவதற்கு பதிலாக, பல லோடுகள் இயக்கி கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். இத்தகைய முறைகேடுகளை தவிர்க்க, வாகன தணிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது.
கனிமவளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'புவியியல் மற்றும் சுரங்கத்துறை உத்தரவுப்படி, கல்குவாரி, மண் குவாரிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. 'மேஜிக் பேனா'வை பயன்படுத்தி, 'டிரிப் சீட்' திருத்தம் செய்தால், மீண்டும் உரிமம் பெற முடியாத அளவுக்கு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறை மீறலுக்காக, குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இதுகுறித்து, அனைத்து மாவட்டங்களுக்கும், எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.நவீன தொழில்நுட்ப வசதியுடன் தயாரிக்கப்பட்ட, 'மேஜிக் பேனா'க்களை பயன்படுத்தி, 'டிரிப் சீட்'களில், முறைகேடு செய்து, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துகின்றனர். 'டிரிப் சீட்'டில் எழுதிய பகுதியை வெயிலில் வைத்தால், எளிமையாக அழிந்துவிடும் வகையிலான, 'இங்க்' மூலம், 'மேஜிக்பேனா' தயாரிக்கப்படுகிறது.