மது விலக்கை அமல்படுத்தக்கோரி மதுக்கடை மீது கல்வீசிய பா.ஜ., தலைவர்

Updated : மார் 14, 2022 | Added : மார் 14, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
போபால்: மூத்த பா.ஜ., தலைவரான உமா பாரதி, மது விலக்கை அமல்படுத்தக்கோரி மதுக்கடை ஒன்றில் கல் வீசி தாக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. அங்கு மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த பா.ஜ., தலைவருமான உமா பாரதி வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி உமா பாரதி
UmaBharti, Vandalised, LiquorShop, MadhyaPradesh, Former UnionMinister, MP, BJP, பாஜக, பாஜ, உமா பாரதி, மதுக்கடை, மது விலக்கு, கல்வீச்சு, வீடியாே

போபால்: மூத்த பா.ஜ., தலைவரான உமா பாரதி, மது விலக்கை அமல்படுத்தக்கோரி மதுக்கடை ஒன்றில் கல் வீசி தாக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. அங்கு மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த பா.ஜ., தலைவருமான உமா பாரதி வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி உமா பாரதி போராட்டத்தில் இறங்கியுள்ளார். மேலும், தனது போராட்டம் மாநில அரசுக்கு எதிரானது இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

ம.பி., தலைநகர் போபால் மாவட்டத்தில் உள்ள ஆசாத் நகரில் அமைந்துள்ள மதுக்கடை ஒன்றில் கல்வீசியுள்ளார். இந்த வீடியோவை அவரே பகிர்ந்தும் உள்ளார். உமா பாரதி கல் வீசுகையில், அவரைச் சூழ்ந்திருந்த தொண்டர்களும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.


latest tamil news



தொழிலாளர்கள் தங்களது வருவாயை மது அருந்துவதற்கே செலவிடுவதாகவும், எனவே அவர்களை நம்பியுள்ள அவரது குடும்பத்தினர் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் உமா பாரதி தெரிவித்துள்ளார். மேலும் சாலைகளில் அமர்ந்து இவர்கள் குடிப்பதால், வீதிகளில் செல்லும் பெண்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்று கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
15-மார்-202205:26:44 IST Report Abuse
NicoleThomson அருமை பெண்மணியே . தமிழ் நாட்டிற்கும் ஒரு எட்டு வந்து சொல்லுங்க
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
15-மார்-202201:49:43 IST Report Abuse
John Miller அண்ணாமலை, ராஜா, அர்ஜுன் சம்பத் போன்றோர் தமிழ்நாட்டில் இவரை போல் கல் எறிந்தால் ஜெயக்குமாரை உள்ளே வைத்து கதற விட்டது போல் இவர்களையும் ஸ்டாலின் கதற விட்டு விடுவார்.
Rate this:
Cancel
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
14-மார்-202220:45:57 IST Report Abuse
Venugopal S இவர்களுக்கும் காஷ்மீரில் ராணுவத்தின் மீது கல்லெறியும் தீவிரவாதிகளுக்கும் என்ன வித்தியாசம் ? பாஜக அதிக பலம் பெறுவது இது போன்ற வன்முறைகளில் தான் முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X