மது விலக்கை அமல்படுத்தக்கோரி மதுக்கடை மீது கல்வீசிய பா.ஜ., தலைவர்| Dinamalar

மது விலக்கை அமல்படுத்தக்கோரி மதுக்கடை மீது கல்வீசிய பா.ஜ., தலைவர்

Updated : மார் 14, 2022 | Added : மார் 14, 2022 | கருத்துகள் (18) | |
போபால்: மூத்த பா.ஜ., தலைவரான உமா பாரதி, மது விலக்கை அமல்படுத்தக்கோரி மதுக்கடை ஒன்றில் கல் வீசி தாக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. அங்கு மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த பா.ஜ., தலைவருமான உமா பாரதி வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி உமா பாரதி
UmaBharti, Vandalised, LiquorShop, MadhyaPradesh, Former UnionMinister, MP, BJP, பாஜக, பாஜ, உமா பாரதி, மதுக்கடை, மது விலக்கு, கல்வீச்சு, வீடியாே

போபால்: மூத்த பா.ஜ., தலைவரான உமா பாரதி, மது விலக்கை அமல்படுத்தக்கோரி மதுக்கடை ஒன்றில் கல் வீசி தாக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. அங்கு மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த பா.ஜ., தலைவருமான உமா பாரதி வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி உமா பாரதி போராட்டத்தில் இறங்கியுள்ளார். மேலும், தனது போராட்டம் மாநில அரசுக்கு எதிரானது இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

ம.பி., தலைநகர் போபால் மாவட்டத்தில் உள்ள ஆசாத் நகரில் அமைந்துள்ள மதுக்கடை ஒன்றில் கல்வீசியுள்ளார். இந்த வீடியோவை அவரே பகிர்ந்தும் உள்ளார். உமா பாரதி கல் வீசுகையில், அவரைச் சூழ்ந்திருந்த தொண்டர்களும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.


latest tamil news



தொழிலாளர்கள் தங்களது வருவாயை மது அருந்துவதற்கே செலவிடுவதாகவும், எனவே அவர்களை நம்பியுள்ள அவரது குடும்பத்தினர் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் உமா பாரதி தெரிவித்துள்ளார். மேலும் சாலைகளில் அமர்ந்து இவர்கள் குடிப்பதால், வீதிகளில் செல்லும் பெண்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்று கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X