ஏர் இந்தியா தலைவராக தமிழகத்தை சேர்ந்த சந்திரசேகரன் நியமனம்

Updated : மார் 15, 2022 | Added : மார் 14, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
புதுடில்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கிய பின், புதிதாக தலைமை செயல் அதிகாரியை நியமிக்கும் முயற்சியில் டாடா குழுமம் இறங்கியது. 'துருக்கி ஏர்லைன்ஸ்' நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான இல்கர் ஐசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் பதவி ஏற்பதற்கு
Air India, Chairman, N Chandrasekaran, Tata Sons Chief, Appointed, ஏர் இந்தியா, தலைவர், சந்திரசேகரன், நியமனம்

புதுடில்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கிய பின், புதிதாக தலைமை செயல் அதிகாரியை நியமிக்கும் முயற்சியில் டாடா குழுமம் இறங்கியது. 'துருக்கி ஏர்லைன்ஸ்' நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான இல்கர் ஐசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் பதவி ஏற்பதற்கு அரசியல் ரீதியாக சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் அவர் பொறுப்பேற்க மறுத்துவிட்டார். இதனால், புதிய நபரை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.


ஏர்இந்தியா தலைவராக சந்திரசேகரன் நியமனம் | Tata | Air India | chandrasekaran

latest tamil news



இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2017 முதல் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்து வருகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-மார்-202208:45:16 IST Report Abuse
சம்பத் குமார் 1).Kongu மண்டலத்தின் விவசாயி திரு. என். சந்திரசேகரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.2). தமிழக மற்றும் இந்திய விவசாயிகள் சார்ப்பாக அவருக்கு, அவரது இந்த புதிய பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
15-மார்-202205:24:07 IST Report Abuse
Sanny தமிழன் என்றால் சும்மாவா? சிங்கப்பூர்,மலேசிய, இலங்கையில் முக்கிய அரச இலாக்காக்களில் தமிழன் தான் முக்கிய ஆலோசகராக, மேலதிகாரியாக இருப்பார்கள். இப்போ இலங்கை தமிழர்களை ஒதுக்கி படிப்பு அறிவில்லாத துப்பாக்கி ஏந்தியவர்களிடம் கொடுத்து இப்போ பொருளாதார துறையில் நாடே திவாலாகி மக்கள் பட்டினியை எதிர் நோக்கி இருக்கிறார்கள். அதேபோல மலேசியாவும் தமிழர்களை ஒதுக்கி மலேசிய மலேயா இனத்தவர்களை நியமித்து அரசு இலாக்காக்களை செயல் படுத்த முடியாமல் நஷ்டத்தில் இயங்குகிறது. இதிலே எங்கே ஆரியன், திராவிடன், பச்சைத்தமிழன் என்று வித்தியாசம் வருது, வெளிநாடுகளில் இன்று வெள்ளைத்தோல் இருப்பவனை வெள்ளைக்காரன் என்றுதான் சொல்லுறாங்க, அதிலே இத்தாலி, கிரேக்கன், அமெரிக்கன், இங்கிலாந்துக்காரன் என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. அதுதான் அவங்க முன்னேறுகிறாங்க. இனிமேலும் நம்மலை நாமே தாழ்த்தி வெளி உலகுக்கு காட்டாதிங்க, தமிழில் வெளிவரும் தினமலரை பலநாடுகளில் தமிழன் அல்லாதவர்களும் பிற நாட்டவர்கள் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் இருக்கிறாங்க, தினமலர் படிக்கிறாங்க.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15-மார்-202204:32:38 IST Report Abuse
J.V. Iyer என்.சந்திரசேகரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஏர் இந்தியா விமானம் போல ஏர் இந்தியா நிறுவனமும் மேலே மேலே பறக்க வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X