இந்தோனேஷியா அருகே கடலில் நிலநடுக்கம்

Added : மார் 15, 2022 | |
Advertisement
ஜகார்த்தா : தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் அருகே உள்ள கடற்பகுதிகளில், நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்தோனேஷியாவில், மேற்கு சுமத்ரா மாகாணத்தின் பரியமன் நகருக்கு மேற்கே, கடற்பகுதியில், 16 கி.மீ., ஆழத்தில், நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில், இது, 6.7 என பதிவானதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதேபோல்,
 இந்தோனேஷியா அருகே கடலில் நிலநடுக்கம்

ஜகார்த்தா : தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் அருகே உள்ள கடற்பகுதிகளில், நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்தோனேஷியாவில், மேற்கு சுமத்ரா மாகாணத்தின் பரியமன் நகருக்கு மேற்கே, கடற்பகுதியில், 16 கி.மீ., ஆழத்தில், நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில், இது, 6.7 என பதிவானதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதேபோல், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் தெற்கே அமைந்துள்ள ஆக்ஸிடென்டல் மிண்டோரோ மாகாணத்தில் உள்ள லுபாங் தீவுக்கு மேற்கே, கடற்பகுதியில், 28 கி.மீ., ஆழத்தில், 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதுமில்லை என்பதுடன், சுனாமி குறித்த எச்சரிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X