டொரோன்டோ : கனடாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி, ஐந்து இந்திய மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வட அமெரிக்க நாடான கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில், கடந்த 12ம் தேதி அதிகாலை, சில இந்திய மாணவர்கள் வேன் ஒன்றில் பயணித்துள்ளனர். எதிரில் வந்த லாரி மீது, வேன் வேகமாக மோதியது.இந்த விபத்தில், ஹர்பிரீத் சிங், ஜஸ்பிந்தர் சிங், கரண்பால் சிங், மோஹித் சவுகான், பவன் குமார் என்ற ஐந்து இந்திய மாணவர்கள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவர்கள், 25 வயதுக்கு உட்பட்டவர்கள்.படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இரண்டு பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த விசாரணை துவங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:கனடாவில் நடந்த சாலை விபத்தில், ஐந்து இந்திய மாணவர்கள் உயிரிழந்த செய்தி, மிகுந்த வேதனை அளித்துள்ளது. அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும், கனடாவில் உள்ள இந்திய துாதரகம் செய்யும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE