ஆரூரா தியாகேசா கோஷம் முழக்க.. திருவாரூர் ஆழி தேரோட்டம் கோலாகலம்

Updated : மார் 15, 2022 | Added : மார் 15, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
திருவாரூர் : ஆரூரா தியாகேசா கோஷம் முழக்க.. திருவாரூர் ஆழி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.பக்தர்கள் வெள்ளத்தில் திருவாரூர் ஆழி தேரோட்டம் திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த மாதம் 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக் கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. நேற்று இரவு அஜபா நடனத்துடன் தியாகராஜர் ஆழித் தேருக்கு
திருவாரூர், ஆழி தேரோட்டம்

திருவாரூர் : ஆரூரா தியாகேசா கோஷம் முழக்க.. திருவாரூர் ஆழி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.



பக்தர்கள் வெள்ளத்தில் திருவாரூர் ஆழி தேரோட்டம் திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த மாதம் 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக் கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. நேற்று இரவு அஜபா நடனத்துடன் தியாகராஜர் ஆழித் தேருக்கு எழுந்தருளினார். அதிகாலை 5 மணிக்கு விநாயகர், முருகன், அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் வடம் பிடிக்கப்பட்டன. தொடர்ந்து ஆசியாவிலேயே மிகப் பிரம்மாண்ட தேர் என பெயர் பெற்ற, 300 டன் எடையும், 96 அடி உயரமும் கொண்ட ஆழித்தேர் வடம் பிடிக்கப்பட்டது.



ஆரூரா தியாகேசா கோஷம் முழுங்க மக்கள் வெள்ளத்தில் திருவாரூர் ஆழி தேரோட்டம்

latest tamil news




பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆரூரா தியாகேசா என்ற பக்தி முழக்கத்துடன், தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். நான்கு ரத வீதிகளிலும் சுற்றி வந்து மாலை 5 மணி அளவில் ஆழித்தேர் நிலைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Neutral Umpire - Chennai ,இந்தியா
16-மார்-202214:36:15 IST Report Abuse
Neutral Umpire இப்போ புல்டோசர் தள்ளுவதற்கு உபயோகிக்கிறார்கள் ..
Rate this:
Cancel
Trichy Mahadevan - Coimbatore,இந்தியா
15-மார்-202218:12:48 IST Report Abuse
Trichy Mahadevan ஓம் நமசிவாய வாழ்க. திருச்சிற்றம்பலம்.
Rate this:
Cancel
MANI DELHI - Delhi,இந்தியா
15-மார்-202214:37:07 IST Report Abuse
MANI DELHI தேரை பார்த்துவிட்டு வந்த என் தாய்க்கு இந்த திருவாரூரில் தான் நான் பிறந்தேன். திருவாரூரில் பிறந்தால் முக்தி. பல முறை நான் பள்ளி விடுமுறை நாட்களில் பார்த்து மகிழ்ந்து இருந்திருக்கிறேன். அன்றெல்லாம் ரோடு தேரின் பாரம் தாங்காமல் மண்ணில் புதைந்து விடும். தேர் நிலைக்கு வருவதற்கே இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும். மக்கள் அன்றய பக்தி இன்று பயமாக மாறிவிட்டது. ஏனென்றால் இறைநம்பிக்கையை குழி தோண்டி புதைக்கிறார்கள். ஆரூரா...தியாகேசா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X