புதுடில்லி: இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 33 ஆயிரமாக குறைந்தது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,503 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,29,96,062 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 4,722 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,24,46,171 ஆனது. தற்போது 33,917 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கோவிட் காரணமாக 97 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,15,974 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 180.40 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 19,64,423 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.