சிமென்ட் விலை 'கிடுகிடு' : மூட்டைக்கு ரூ.70 உயர்வு

Added : மார் 16, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
சென்னை: கட்டுமான பணிக்கான சிமென்ட் விலை, ஒரே வாரத்தில் மூட்டைக்கு 70 ரூபாய் உயர்ந்துள்ளதால், வீடு கட்டுவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.நாட்டின் பிற மாநிலங்களில் இல்லாத வகையில், தமிழகத்தில் மட்டும் சிமென்ட் விலை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உயர்ந்து விடுகிறது. இங்குள்ள சிமென்ட் நிறுவனங்கள், தங்களுக்குள் பேசி வைத்து, சிமென்ட் விலையை அவ்வப்போது உயர்த்தி வருகின்றன.
Cement, Price Hike, Tamilnadu, தமிழகம், சிமென்ட், விலை உயர்வு

சென்னை: கட்டுமான பணிக்கான சிமென்ட் விலை, ஒரே வாரத்தில் மூட்டைக்கு 70 ரூபாய் உயர்ந்துள்ளதால், வீடு கட்டுவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாட்டின் பிற மாநிலங்களில் இல்லாத வகையில், தமிழகத்தில் மட்டும் சிமென்ட் விலை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உயர்ந்து விடுகிறது. இங்குள்ள சிமென்ட் நிறுவனங்கள், தங்களுக்குள் பேசி வைத்து, சிமென்ட் விலையை அவ்வப்போது உயர்த்தி வருகின்றன. சட்டசபை தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், கடந்த ஆண்டு சிமென்ட் விலை மூட்டைக்கு 60 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இதனால், அரசு மற்றும் தனியார் கட்டுமான திட்டங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டது.


சிமென்ட் விலை மூட்டைக்கு ரூ 70 உயர்வு | Cement Price | MK Stalin | Dinamalar

latest tamil newsமுதல்வர் ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் சிமென்ட் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தினர். இதனால், மூட்டைக்கு 50 ரூபாய் வரை குறைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது சிமென்ட் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த வார நிலவரப்படி, முதல் தர சிமென்ட் சில்லறை விலை ஒரு மூட்டை 380 ரூபாயாக இருந்தது, தற்போது 450 ரூபாயாக உயர்ந்துள்ளது.


latest tamil news


இது குறித்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் ராமபிரபு கூறியதாவது: ஒரே வாரத்தில் சிமென்ட் விலை மூட்டைக்கு 70 ரூபாய் உயர்ந்துள்ளது. பிற மாநிலங்களில் இல்லாத வகையில், தமிழகத்தில் மட்டும்சிமென்ட் விலை உயர்த்தப்படுகிறது. தமிழக அரசு தலையிட்டு, சிமென்ட் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, சிமென்ட் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல, உக்ரைன் போரை காரணமாக கூறி, டி.எம்.டி., கம்பி விலை, மின்சார இணைப்பு, பிளம்பிங் பொருட்களின் விலையும் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
16-மார்-202218:44:56 IST Report Abuse
sankar கரக்சன் கலெக்ஸன் கமிஷன் சொன்னதை செய்கிறார் தமிழக முதல்வர் சொன்னதை செய்யும் அரசு
Rate this:
Cancel
R Ravikumar - chennai ,இந்தியா
16-மார்-202218:32:54 IST Report Abuse
R Ravikumar கேடு கேட்ட வியாபாரிகள் .. உக்ரைன் ரஷ்யா போரில் யார் இவனுங்க கிட்ட சிமெண்ட் வாங்குவா ? எல்லாம் எதாவது காரணம் சொல்லி கொள்ளை லாபம் பார்ப்பதற்கான வேலை இது .
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
16-மார்-202217:42:30 IST Report Abuse
DVRR தற்போது இலங்கை - Today Srilanka ஒரு கிலோ பருப்பின் விலை ரூ.250 – Dal/Pulses a kilo Rs. 250 சர்க்கரை கிலோ ரூ.215-Sugar a kilo Rs. 215 உருளைக் கிழங்கு கிலோ ரூ.300 – Potato a kilo Rs. 300 பெரிய வெங்காயம் கிலோ ரூ.400 – Onion a kilo Rs. 400 உளுந்து கிலோ ரூ.2,000 – Udath Dal a kilo Rs. 2000 ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.254- Petrol a litre Rs. 254 ஒரு லிட்டர் டீசல் 176- Diesel a litre Rs. 176 தட்டுப்பாடு ஒருபுறம், விலை உயர்வு ஒருபுறம் – Deficiency one side, price increase oneside. Rs. - எல்லாம் ஸ்ரீலங்கன் ரூபாயில். இந்திய 1 ரூபாய் = 3.23 ஸ்ரீலங்கன் ரூபாய்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X