சவுதி அரேபியா முடிவால் அமெரிக்கா அதிர்ச்சி

Updated : மார் 17, 2022 | Added : மார் 17, 2022 | கருத்துகள் (24)
Advertisement
வாஷிங்டன் : சீனாவுக்கு அந்த நாட்டின் கரன்சியான 'யுவான்' வாயிலாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய மேற்காசிய நாடான சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. இதனால், சர்வதேச அளவில் டாலருக்கான முக்கியத்துவம் குறைந்தவிடும் என்பதால், அமெரிக்கா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.தற்போது உலகெங்கும் நடக்கும் வர்த்தகங்களில் பெரும்பாலும், அமெரிக்காவின் கரன்சியான டாலரின்


வாஷிங்டன் : சீனாவுக்கு அந்த நாட்டின் கரன்சியான 'யுவான்' வாயிலாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய மேற்காசிய நாடான சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. இதனால், சர்வதேச அளவில் டாலருக்கான முக்கியத்துவம் குறைந்தவிடும் என்பதால், அமெரிக்கா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.latest tamil newsதற்போது உலகெங்கும் நடக்கும் வர்த்தகங்களில் பெரும்பாலும், அமெரிக்காவின் கரன்சியான டாலரின் அடிப்படையிலேயே செய்யப்படுகின்றன. அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இடையே நீண்ட காலமாக நல்ல உறவு இருந்து வந்துள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெயை, சீன கரன்சி யுவானிலேயே பரிவர்த்தனை செய்ய சவுதி அரேபியா முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேச்சு நடந்து வருகிறது.சவுதி அரேபியாவின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில், 25 சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இத்தனை ஆண்டுகளாக டாலரின் அடிப்படையில் பரிவர்த்தனை நடந்து வந்த நிலையில், அதை கைவிட சவுதி அரேபியா முன்வந்துள்ளது,


latest tamil newsஅமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அந்நாடு சவுதி அரேபியாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே, அமெரிக்கா - சீனா இடையே மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில், அமெரிக்க பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள சீன தொழில்நுட்ப நிறுவனங்களின் மதிப்பு வெகுவாக சரிந்துள்ளது.

இதனால், அமெரிக்க பங்குச் சந்தையில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளன.இது ஒருபுறம் இருக்க, கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக வேகமாக குறைந்து வருகிறது. ஒரு பேரலுக்கு, 20 டாலர் வரை குறைந்துள்ளது. இப்படி, அமெரிக்க டாலர் பல வகைகளில் பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், சவுதி அரேபியாவின் முடிவு, அமெரிக்காவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, ஒரு பக்கம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் மோதல்; மறுபக்கம் சீன அதிபர் ஷீ ஜிங்பிங்குடன் மோதல் என, ஜோ பைடன் சர்வதேச அரங்கில் சதுரங்கம் விளையாடி வருகிறார்.

பொருளாதார தடை விதிக்கப்படும் என, அமெரிக்கா விடுத்த மிரட்டல்கள், அந்த நாட்டுக்கே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால், சவுதி அரேபியா - சீனா ஒப்பந்த விவகாரத்தில் ஜோ பைடனின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
23-மார்-202213:34:00 IST Report Abuse
Ramalingam Shanmugam சொந்த காசில் சூன்யம்
Rate this:
Cancel
W W - TRZ,இந்தியா
23-மார்-202208:55:34 IST Report Abuse
W W நல்ல முடியு இதே காரணத்திற்கவே சாதாம் ஹூஷேநுனும் ,கடாப்பியும் ஒரம் கட்டப்பட்டனர் , இனியும் உங்கள் பாட்சா பலிக்காது ஒரே கரன்சி ஒரே கன்வர்ஷன் இதில் பயனடைவர் இருவர் மட்டுமே (இதில் கமிஷன் அடிக்க மிடில் மேன் எதற்க்கு?)இதற்கு எனக்கு தெரிந்த ஒரு சம்பவம் இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்,நான் வெளினட்டில் ஒரு ஷூவை சீனா தயரிப்பில் Rs 1200 க்கு வாங்கினேன் .அதே ஷூவை (100% same) அமெரிக்கன் ப்ரண்டில் Rs 2500 (சீனா தயரிப்பு)ல் விற்கிறரர்கள், முதல் இல்லமல் வியபாரம்இது தான் அவர்களின் கைவந்த கலை. இது ஒரு சிரிய ( small Example ) சம்பவம் மட்டுமே.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
20-மார்-202216:48:13 IST Report Abuse
M  Ramachandran பெரியன்னன் தலையில் ஒரு சம்முட்டி ஆதி. ருசியா வாய் மிரட்ட போக சொந்த காசில் சூனியம் வாய்த்த கதையாக போயிற்று. அடுத்து ஐ ரோபோ நாடுகள் முதலில் பிரான்ஸ் முழித்து கொள்ளும். பிறகு வரிசையாக ஒவவொரு ஐ ரோபியா நாடும் அமெரிக்கா வின் பிடியிலிருந்து வெளியேறும். இந்தியா வின் மோடி தீர்க்க தரிசி போல் செயல் பட்டதால் நாம் நம் மதிப்பில் உயர்ந்துள்லோம் . ரஷ்யாவும் நமக்கு முடிந்த உதவிகளிய தடையின்றி செய்யும். ரேசிங் தான் உண்டு தன நாடு உண்டு என்று இருக்கும் நாடு. ஆனால் அமெரிக்கா எல்லஆ வற்றிலும் மூகைய நுழைக்கும் தான் தான் பெரியண்ணன் என்ற போக்கோடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X