ஒரே பதவி; ஒரே ஓய்வூதிய திட்டத்தை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

Updated : மார் 17, 2022 | Added : மார் 17, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி : ராணுவத்தில், 'ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்' என்ற மத்திய அரசின் திட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.ராணுவத்தினருக்கான, ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம் திட்டத்தை மத்திய அரசு 2015ல் அறிவித்தது. 'இத்திட்டத்தின் கீழ், ஓய்வூதியம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது.ஆனால், 'இதை ஆண்டுதோறும் மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும். 2013ம்


புதுடில்லி : ராணுவத்தில், 'ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்' என்ற மத்திய அரசின் திட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.latest tamil news


ராணுவத்தில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் சரிதான் சுப்ரீம் கோர்ட் அதிரடி

ராணுவத்தினருக்கான, ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம் திட்டத்தை மத்திய அரசு 2015ல் அறிவித்தது. 'இத்திட்டத்தின் கீழ், ஓய்வூதியம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது.

ஆனால், 'இதை ஆண்டுதோறும் மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும். 2013ம் ஆண்டை அடிப்படையாக வைத்து ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை, 2014ம் ஆண்டை அடிப்படையாக வைத்து மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும்' என, முன்னாள் வீரர்கள் இயக்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


latest tamil newsஇந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு: மத்திய அரசு ஒரு கொள்கை முடிவை எடுத்துள்ளது. அத்தகைய முடிவு அரசாங்கத்தின் கொள்கை வகுப்பதற்கான அதிகார வரம்பிற்குள் உள்ளது.

எனவே மத்திய அரசு வகுத்த திட்டத்தை நீதிமன்றம் உறுதி செய்கிறது. ஐந்தாண்டுகள் முடிவடைந்த பின்னரும், இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்'திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள மறுசீரமைப்பு பணியை, 2019 ஜூலை 1 முதல் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
17-மார்-202211:43:18 IST Report Abuse
S.Baliah Seer ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டம் பாராட்டுக்கு உரியது. ஆனால் இத்திட்டத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு லாபம் இல்லை என்பதால் அதற்கு முடிந்த மட்டும் முட்டுக்கட்டைப் போடுகிறார்கள். உச்ச நீதி மன்றம் பலமுறை தீர்ப்பு வழங்கியும் அதை மதிக்காமல் BSNL பென்சன் தாரர்களை 2006-க்கு முன், அதற்குப்பின் என்று ஐஏஎஸ் பிரிக்க அவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்று நான் கேட்கவில்லை. உச்ச நீதிமன்றம் கேட்கிறது. தங்களுக்கு லாபம் என்றால் மட்டுமே ஐஏஎஸ் ஆர்வம் காட்டுவார்கள்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
17-மார்-202209:17:47 IST Report Abuse
duruvasar இதற்காகக் கருணாநிதி ஆட்சிகாலத்தில் தமிழநாட்டிலிருந்து குரல் எழுப்பப்பட்டது என்ற வரலாற்று உண்மையைநடுநிலை கட்சி ஊடகங்கள் விவாதங்கள் வைத்து வெளிக்கொண்டுவர வேண்டும். இது விஷயமாக தர்மபுரி நாடமன்ற உறுப்பினர் திரு.செந்தில்குமார் ராஜ்நாத் சிங்கிற்க்கு அழுத்தம் கொடுத்ததையும் குறிப்பிடவேண்டும்.
Rate this:
A.C.VALLIAPPAN - KARAMA,இந்தியா
17-மார்-202210:05:55 IST Report Abuse
A.C.VALLIAPPANஇந்த திட்டம் அண்ணாதுரை அவர்கள் மற்றும் பெரியஆர் கொண்டு வந்த திட்டம்...
Rate this:
Kannan Chandran - Manama,பஹ்ரைன்
17-மார்-202210:25:21 IST Report Abuse
Kannan Chandranஇன்னும் கூவலாம், அதாவது ஒசாமா பின் லாடன் மன்மோகன்சிங்கிற்கு அழுத்தம் கொடுத்து கொண்டு வந்த திடடம்....
Rate this:
Cancel
sampath, k - HOSUR,இந்தியா
17-மார்-202207:36:35 IST Report Abuse
sampath, k Central and State government employees are also paid pension in four groups A B C and D with 30 years service.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X