இரண்டு மாதங்களில் அத்திக்கடவு திட்டம் 'ரெடி'

Updated : மார் 17, 2022 | Added : மார் 17, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
அன்னுார் : 'அத்திக்கடவு-அவிநாசி திட்டம் வரும் ஜூன் மாதம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில், ஈரோடு மாவட்டம், காளிங்கராயன் அணைக்கட்டில் துவங்கி, பெருந்துறை, அவிநாசி, அன்னுார் வழியாக, காரமடை ஒன்றியம் வரை, ஈரோடு, திருப்பூர், கோவை என, மூன்று மாவட்டங்களில் 1,045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்பட
அத்திக்கடவு,அவிநாசி,காளிங்கராயன் அணை

அன்னுார் : 'அத்திக்கடவு-அவிநாசி திட்டம் வரும் ஜூன் மாதம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில், ஈரோடு மாவட்டம், காளிங்கராயன் அணைக்கட்டில் துவங்கி, பெருந்துறை, அவிநாசி, அன்னுார் வழியாக, காரமடை ஒன்றியம் வரை, ஈரோடு, திருப்பூர், கோவை என, மூன்று மாவட்டங்களில் 1,045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்பட உள்ளது.

இத்திட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில், 5 இடங்களில் நீரேற்று நிலையங்களும், கோவை மாவட்டத்தில், அன்னுார் அருகே குன்னத்துாராம்பாளையத்தில், ஒரு நீரேற்று நிலையமும் அமைக்கும் பணி முடியும் தறுவாயில் உள்ளது. இப்பணியை நேற்றுமுன்தினம் திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன், அத்திக்கடவு திட்ட செயற்பொறியாளர் அன்பழகன் மற்றும் உதவி பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.


latest tamil news


ஆய்வுக்கு பிறகு அதிகாரிகள் கூறுகையில், 'மொத்தம் 1,065 கி.மீ., துாரத்திற்கு பிரதான மற்றும் கிளை குழாய்கள் அமைக்க வேண்டும். இதில் 14ம் தேதி வரை 938 கி.மீ., துாரத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 70 நாட்கள் பவானி ஆற்றில் உபரி நீர் வந்தால் 1.5 டி.எம்.சி., நீரை பயன்படுத்தி 1,045 குளம், குட்டைகளிலும் நீர் நிரப்ப முடியும். வரும் ஜூன் மாதம் பணிகள் முழுமையாக முடிந்து செயல்பாட்டுக்கு வரும்' என்றனர்.

எம்.எல்.ஏ., ஈஸ்வரன் கூறுகையில், "முதல் திட்டத்தில் விடுபட்ட குளங்களுக்கான, அத்திக்கடவு இரண்டாவது திட்டத்தை செயல்படுத்த, முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம். தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தில் விவசாயிகளின் கருத்துகளை கேட்ட பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C G MAGESH - CHENNAI,இந்தியா
17-மார்-202214:27:11 IST Report Abuse
C G MAGESH எடப்பாடி ஆட்சியில் ஆரம்பித்த திட்டம். இவர்கள் ஸ்டிக்கர் ஒட்டி கொள்வார்கள்
Rate this:
Cancel
Desi - Chennai,இந்தியா
17-மார்-202211:05:46 IST Report Abuse
Desi தலீவரே, திட்டம் ரெடி. ஸ்டிக்கர் ரெடியா?
Rate this:
தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
17-மார்-202213:43:08 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன்........
Rate this:
Cancel
17-மார்-202210:22:55 IST Report Abuse
சம்பத் குமார் 1). கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் பலநாட்கள் கனவு திட்டம் இது.2). அதாவது 75 வருடங்களாக காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகள் இதற்கு எந்த முன்னேற்பாடும் செய்யவில்லை. 3).ஆனால் முன்னாள் முதல்வர் திரு பழனிச்சாமி அவர்கள் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து இதனை ஆரம்பித்து நடைமுறைபடுத்த உத்தரவு பிறப்பித்தார். 4). முன்னாள் முதல்வர் திரு பழனிச்சாமி அவர்களுக்கு கொங்கு மண்டலத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 5). அதேசமயம் இன்னாள் முதல்வர் இந்த திட்டத்தை முடிக்க உதவியதற்கு வாழ்த்துக்கள். நன்றி வணக்கம் ஐயா
Rate this:
CBE CTZN - Coimbatore,இந்தியா
18-மார்-202211:24:19 IST Report Abuse
CBE CTZNநீங்கள் கூறியது நூற்றுக்குநூறு உண்மை.. ஆனால், இந்த பழனிச்சாமி ஐயா, இதை துரிதமாக துவங்கி செய்திருந்தால், திட்டம் அவர்களது ஆட்சியிலேயே முடிவு பெற்று முழு பயன்பாட்டுக்கு வந்திருக்கும்.. என்ன செய்வது நாம் இவர்களை அஞ்சு வருசத்தத்துக்கு தேர்தெடுத்தால், இவர்கள் இருபது வருடத்துக்கு திட்டம் போடுகிறார்கள்... அப்பறோம் எங்க முடியும் ... இப்படித்தான் ஒருத்தர் துவக்கி வைப்பார் இன்னோருத்தர் முடித்து செயல் பாட்டுக்கு கொண்டுவந்து தன் சாதனையாக காண்பிப்பார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X