இரண்டு மாதங்களில் அத்திக்கடவு திட்டம் ரெடி| Dinamalar

இரண்டு மாதங்களில் அத்திக்கடவு திட்டம் 'ரெடி'

Updated : மார் 17, 2022 | Added : மார் 17, 2022 | கருத்துகள் (8) | |
அன்னுார் : 'அத்திக்கடவு-அவிநாசி திட்டம் வரும் ஜூன் மாதம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில், ஈரோடு மாவட்டம், காளிங்கராயன் அணைக்கட்டில் துவங்கி, பெருந்துறை, அவிநாசி, அன்னுார் வழியாக, காரமடை ஒன்றியம் வரை, ஈரோடு, திருப்பூர், கோவை என, மூன்று மாவட்டங்களில் 1,045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்பட
அத்திக்கடவு,அவிநாசி,காளிங்கராயன் அணை

அன்னுார் : 'அத்திக்கடவு-அவிநாசி திட்டம் வரும் ஜூன் மாதம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில், ஈரோடு மாவட்டம், காளிங்கராயன் அணைக்கட்டில் துவங்கி, பெருந்துறை, அவிநாசி, அன்னுார் வழியாக, காரமடை ஒன்றியம் வரை, ஈரோடு, திருப்பூர், கோவை என, மூன்று மாவட்டங்களில் 1,045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்பட உள்ளது.

இத்திட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில், 5 இடங்களில் நீரேற்று நிலையங்களும், கோவை மாவட்டத்தில், அன்னுார் அருகே குன்னத்துாராம்பாளையத்தில், ஒரு நீரேற்று நிலையமும் அமைக்கும் பணி முடியும் தறுவாயில் உள்ளது. இப்பணியை நேற்றுமுன்தினம் திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன், அத்திக்கடவு திட்ட செயற்பொறியாளர் அன்பழகன் மற்றும் உதவி பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.


latest tamil news


ஆய்வுக்கு பிறகு அதிகாரிகள் கூறுகையில், 'மொத்தம் 1,065 கி.மீ., துாரத்திற்கு பிரதான மற்றும் கிளை குழாய்கள் அமைக்க வேண்டும். இதில் 14ம் தேதி வரை 938 கி.மீ., துாரத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 70 நாட்கள் பவானி ஆற்றில் உபரி நீர் வந்தால் 1.5 டி.எம்.சி., நீரை பயன்படுத்தி 1,045 குளம், குட்டைகளிலும் நீர் நிரப்ப முடியும். வரும் ஜூன் மாதம் பணிகள் முழுமையாக முடிந்து செயல்பாட்டுக்கு வரும்' என்றனர்.

எம்.எல்.ஏ., ஈஸ்வரன் கூறுகையில், "முதல் திட்டத்தில் விடுபட்ட குளங்களுக்கான, அத்திக்கடவு இரண்டாவது திட்டத்தை செயல்படுத்த, முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம். தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தில் விவசாயிகளின் கருத்துகளை கேட்ட பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X