ஆயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் புகுந்த தியேட்டர் மீது ரஷ்யா தாக்குதல்

Updated : மார் 17, 2022 | Added : மார் 17, 2022 | கருத்துகள் (4)
Advertisement
கீவ்: உக்ரைனில் 22வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, மரியபோல் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சம் புகுந்திருந்த தியேட்டர் மீது தாக்குதல் நடத்தியது. அதில், எத்தனை பேர் உயிரிழந்தனர், காயமடைந்தனர் என்பது குறித்து தகவல் இல்லை.22வது நாளாக உக்ரைனில் பல நகரங்கள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு புகலிடம் தேடி
Ukraine Theatre, Housing, Bombed, Russia, Denies,ck: 10 Facts

கீவ்: உக்ரைனில் 22வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, மரியபோல் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சம் புகுந்திருந்த தியேட்டர் மீது தாக்குதல் நடத்தியது. அதில், எத்தனை பேர் உயிரிழந்தனர், காயமடைந்தனர் என்பது குறித்து தகவல் இல்லை.

22வது நாளாக உக்ரைனில் பல நகரங்கள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு புகலிடம் தேடி சென்றுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்த நிலையில், மரியபோல் நகரில் 2,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.


latest tamil news


இந்நிலையில், இந்த நகரில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு பயந்தும், வீடுகளை இழந்தோரும் தியேட்டர் ஒன்றில் தங்கியிருந்தனர். இந்த தியேட்டர் மீது ரஷ்ய விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில், அந்த தியேட்டர் நொறுங்கியது. இதில் எத்தனை பேர் உயிரிழந்தனர், காயமடைந்தனர் என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. அங்கு தாக்குதல் நடந்துள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகமும் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான தியேட்டர் கட்டடத்தின் முன்பக்கத்தில் ரஷ்ய மொழியில் குழந்தைகள் என ரஷ்ய மொழியில் எழுதப்பட்டிருந்தது.


ரஷ்யா மறுப்பு

அதேநேரத்தில் இந்த தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என தெரிவித்துள்ள ரஷ்யா, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தவில்லை எனவும் கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
17-மார்-202214:02:01 IST Report Abuse
Vena Suna Lost all respect for Russia
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
17-மார்-202212:57:32 IST Report Abuse
Tamilan மக்களும் ஆயுதமேந்தி போராடுகிறார்கள் . பாமர மக்களின் பின்னால் ஒளிந்து கொண்டு போராடும் கும்பல் அங்குமட்டுமல்லா. உலகமெல்லாம் உள்ள கார்போரேடு மாபிக்காளிடமும் , அரசியல் சட்ட , விஞ்சான மாபியாக்களிடம் உலகமெல்லாம் பரவிக்கிடக்கும் ஒன்று.
Rate this:
Cancel
மணி - புதுகை,இந்தியா
17-மார்-202211:50:10 IST Report Abuse
மணி உக்ரைன் பொதுமக்களிடம் ஆயுதங்களை கொடுத்து அவர்களை ரஷ்ய ராணுவத்தினரை தாக்க சொல்கிறது உக்ரைன் அரசாங்கம், பிறகு எப்படி ரஷ்ய ராணுவத்தினரால் உக்ரைன் பொதுமக்கள் ராணுவத்தினர் என்று பிரித்து பார்க்கமுடியும் ?
Rate this:
தமிழன் - madurai,இந்தியா
17-மார்-202213:16:10 IST Report Abuse
தமிழன்இலங்கையில் விடுதலை புலிகளும் மக்களை கேடயமாக பயன்டுத்தினர், அதனால் அந்த அரசாங்கம் LTTE தவிர மக்களையும் கொன்று குவித்தது. அதை நியாயம் என்று சொல்வீர்களா பாஸ்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X