கூரை மட்டும் தான் சூரிய மின் பலகைகளிலிருந்து மின் ஆற்றலை உற்பத்தி செய்ய உகந்த இடமா? கட்டடம் என்று இருந்தால், நான்கு சுவர்கள் மீதும் வெயில் படத்தான் செய்கிறது. அதை விட்டுவைப்பானேன்? சுவர்களுக்கு சூரிய ஒளிப் பலகைகள் வராததற்கு அதன் கரிய நிறம்தான் காரணம். சுவர்களின் அழகை அவை மட்டுப்படுத்துவதாக பலர் நினைப்பதால், சுவரின் வெயில் ஆற்றல் வீணாவதை சில விஞ்ஞானிகள் விரும்பவில்லை.
உடனே, பல வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் சூரிய மின் பலகைகளை தயாரிக்கத் துவங்கியுள்ளனர்.கனடாவிலுள்ள மிட்ரெக்ஸ் நிறுவனம், பலவித வடிவமைப்புகள் மற்றும் வண்ணங்களில் சூரிய மின் பலகைகளை வடிவமைத்துள்ளது. இவை வெளிச் சுவர்களுக்காகவே தயாரிக்கப்படுபவை. கட்டடத்துடன் ஒருங்கிணைந்த சூரிய மின் பலகை (BIPV) என்று இந்த பலகைகளுக்கு பெயர்.சுவரின் மேற்பரப்பில், எந்த வடிவத்திலும் வெட்டி ஒட்டும்படி பலகைகளை மிட்ரெக்ஸ் தயாரித்து வருகிறது.
ஒரு சராசரி வீட்டின் சுவர்களில் இப்பலகைகளை அமைத்தால், 350 வாட் மின்சாரம் வரை தயாரிக்க முடியும் என்கின்றனர் மிட்ரெக்சின் ஆராய்ச்சியாளர்கள்.விரைவில் இந்த தொழில்நுட்பம் இந்தியாவில் பரவிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE