ஊழலுக்கு எதிராக உதவி எண் அறிமுகம்; புகாரை நேரடியாகவும் பெற பஞ்சாப் முதல்வர் முடிவு

Updated : மார் 17, 2022 | Added : மார் 17, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
சண்டிகர்: வரும் 23ம் தேதி முதல் ஊழலுக்கு எதிராக புகார்களை தெரிவிக்க உதவி எண் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் லஞ்சம் தொடர்பான புகார்களை தனது தனிப்பட்ட வாட்ஸ் எண்ணுக்கு பொது மக்கள் அனுப்பலாம் எனவும் தெரிவித்துள்ளார்.பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றியது. அக்கட்சியின் பக்வந்த் மான், முதல்வராக
Punjab, CM, anti-corruption, helpline, complaints, personal, WhatsApp, number,

சண்டிகர்: வரும் 23ம் தேதி முதல் ஊழலுக்கு எதிராக புகார்களை தெரிவிக்க உதவி எண் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் லஞ்சம் தொடர்பான புகார்களை தனது தனிப்பட்ட வாட்ஸ் எண்ணுக்கு பொது மக்கள் அனுப்பலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றியது. அக்கட்சியின் பக்வந்த் மான், முதல்வராக நேற்று(மார்ச் 16) பதவியேற்று கொண்டார். இன்று எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் பதவியேற்று கொண்டனர்.


latest tamil news


பஞ்சாபில் ஊழலை தடுக்கும் 'ஹெல்ப்லைன்' வசதியை அறிமுகம் செய்யப்போவதாக முதல்வர் பகவந்த் மான் அறிவித்தார். பகத்சிங் நினைவு தினமான வரும் 23 முதல் இந்த ெஹல்ப்லைன் நடைமுறைக்கு வரும்; ெஹல்ப் லைன் நம்பர் எனது சொந்த நம்பராக இருக்கும் என அவர் கூறினார். யாராவது லஞ்சம் கேட்டால் அதை வீடியோவாகவோ, ஆடியோவாகவோ பதிவு செய்து எனது நம்பருக்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பலாம் என்றார். பெரும்பாலான அரசு ஊழியர்கள் நேர்மையாக உள்ளனர். கொஞ்சம் பேரால்தான் ஊழல் நடக்கிறது. அவர்களை ஒழித்து கட்டுவோம்; பஞ்சாபில் லஞ்சம் தொடர அனுமதிக்க மாட்டோம் என்றார், முதல்வர் மான்.


இந்நிலையில், பக்வந்த் மான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பகத் சிங் வீரமரணம் அடைந்த நாளில், ஊழலுக்கு எதிரான உதவி எண் அறிவிக்க உள்ளோம். அது எனது தனிப்பட்ட வாட்ஸ் ஆப் எண்ணாக இருக்கும். யாராவது லஞ்சம் கேட்டால், அ தனை வீடியோ / ஆடியோவாக பதிவு செய்து என்னிடம் அனுப்பலாம். ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பஞ்சாபில் இனியும் ஊழலுக்கு இடமில்லை என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-மார்-202207:09:59 IST Report Abuse
Lion Drsekar எங்கள் மன்னரும் ஒரு செய்தி சொன்னார் இரண்டு நாளில் நல்ல செய்தி காத்திருக்கிறது என்று, இதுவரை யாருமே அதை நினைத்துக்கூட பார்க்கவில்லை, அந்த அளவுக்கு மறதி வியாதி, இதுதான் மன்னர்களுக்கு ப்ளஸ் . வந்தே மாதரம்
Rate this:
Cancel
18-மார்-202207:06:17 IST Report Abuse
ஆதிகுடி கொற்கை ஊழலுக்கு எதிரான நடவடிக்கை!!! இது மக்களுக்கு பிடிக்காத விஷயம் ஆச்சே!!! இதை செய்தீர்களானால் அடுத்த முறை ஆட்சிக்கு வர முடியாது !!!
Rate this:
Cancel
Neutral Umpire - Chennai ,இந்தியா
18-மார்-202206:33:40 IST Report Abuse
Neutral Umpire டில்லியில் அரசு ஊழியர்கள் ஒழுங்கான வேலை செய்வதற்கு வாங்கும் லஞ்சம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது ...எங்கெங்கு லஞ்சம் கொடுப்பதனாலும் வாங்குவதாலும் ரெண்டு பேருக்குமே லாபம் இருக்கோ அவை தாராளமா நடக்கின்றது ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X