தவறான வார்த்தை பிரயோகம்: சிரிப்பை வரவழைத்த ஜோ பைடன்

Added : மார் 18, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
வாஷிங்டன்: துணை அதிபர் கமலா ஹாரிஸ் குறித்து குறிப்பிடும் வார்த்தையை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தவறாக பயன்படுத்தியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.அமெரிக்காவில் அதிபரின் மனைவியை, 'பர்ஸ்ட் லேடி' என அழைப்பர். வாஷிங்டனில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், கமலா ஹாரிஸ் பங்கேற்கவில்லை. இதை ஜோ பைடன் குறிப்பிடுகையில், ''பர்ஸ்ட் லேடியின் கணவருக்கு கொரோனா தொற்று
Kamala Harris, Joe Biden, First Lady

வாஷிங்டன்: துணை அதிபர் கமலா ஹாரிஸ் குறித்து குறிப்பிடும் வார்த்தையை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தவறாக பயன்படுத்தியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் அதிபரின் மனைவியை, 'பர்ஸ்ட் லேடி' என அழைப்பர். வாஷிங்டனில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், கமலா ஹாரிஸ் பங்கேற்கவில்லை. இதை ஜோ பைடன் குறிப்பிடுகையில், ''பர்ஸ்ட் லேடியின் கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது,'' என கூறினார்.


latest tamil news


அப்போது அங்கிருந்த சிலர், 'அப்படி பார்த்தால், உங்களுக்கா கொரோனா' என, கேட்டனர். இதையடுத்து தன் தவறை உணர்ந்த ஜோ பைடன், ''என்னுடைய பர்ஸ்ட் லேடி நலமாக இருக்கிறார். செகண்ட் லேடியின் முதல் ஜென்டில்மேனுக்குதான் கொரோனா,'' என, சமாளித்தார். இதனால், நிகழ்ச்சி நடந்த அரங்கில் சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது.

இதற்கு முன்பும், இதுபோல் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஜோ பைடன் சிக்கியுள்ளார். ஒரு முறை கமலா ஹாரிசை, அதிபர் என கூறினார். சமீபத்தில் உக்ரைன் குறித்து குறிப்பிடும்போது, தவறாக ஈரான் என குறிப்பிட்டார்.



Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Neutral Umpire - Chennai ,இந்தியா
19-மார்-202211:52:09 IST Report Abuse
Neutral Umpire பாரிய விபத்தில் ..பார்யா என்றால் மனைவி என்றும் சொல்வதுண்டு .
Rate this:
Cancel
C G MAGESH - CHENNAI,இந்தியா
18-மார்-202214:57:33 IST Report Abuse
C G MAGESH அமெரிக்க ஸ்டாலின்
Rate this:
Cancel
C G MAGESH - CHENNAI,இந்தியா
18-மார்-202214:57:16 IST Report Abuse
C G MAGESH அமெரிக்கா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X