தொழில் துறையினருக்கு பட்ஜெட்டால் பலன் இல்லை: பா.ஜ., வானதி கருத்து

Updated : மார் 19, 2022 | Added : மார் 19, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
கோவை: ''தொழில் துறையினருக்கு பலன் தரும் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லாதது வருத்தம் அளிக்கிறது,'' என, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.தமிழக அரசின் பட்ஜெட் குறித்து வானதி சீனிவாசன் கூறியதாவது:கோவையில் ஐந்து கோடி மதிப்பில் கயிறு வணிக நிறுவனம் அமைக்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொள்ளாச்சியில் கயறு வாரிய அலுவலகம்


கோவை: ''தொழில் துறையினருக்கு பலன் தரும் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லாதது வருத்தம் அளிக்கிறது,'' என, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.

தமிழக அரசின் பட்ஜெட் குறித்து வானதி சீனிவாசன் கூறியதாவது:கோவையில் ஐந்து கோடி மதிப்பில் கயிறு வணிக நிறுவனம் அமைக்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொள்ளாச்சியில் கயறு வாரிய அலுவலகம் செயல்படுகிறது. அதனால் புதிய திட்டங்களை கொண்டு வருவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.latest tamil newsகுறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் உதவி திட்டம் மற்றும் மானியம் குறித்து எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை. தொழில் துறையினருக்கு பலன் தரும் எந்த அறிவிப்பும் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.
புலம் பெயர் தொழிலாளர்களுக்கு நடமாடும் மையம் அமைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக அவர்களுக்கு நிரந்தரமான மையம் அமைப்பதுதான் தீர்வாக இருக்கும்.பெண்கள் திருமண உதவி திட்டத்தை உயர்கல்வி உதவி திட்டமாக மாற்றி அறிவித்துள்ளனர். அதை காரணம் காட்டி திருமண உதவித்திட்டத்தை நிறுத்தி விடக்கூடாது.


latest tamil newsமத்திய அரசு கொண்டு வந்துள்ள பல திட்டங்களை தமிழாக்கம் செய்து, தாங்கள் கொண்டு வந்த புதிய திட்டங்கள் போல், இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். குறிப்பாக, 'அரசு பொருட்களை ஆன்லைன் வழியாக வாங்குதல்' என்பது 'ஜெம் போர்ட்டல்' என்ற மத்திய அரசின் திட்டம்.
கோவை மெட்ரோ ரயில் திட்டம் துவங்குவதற்கான எந்த அறிவிப்பும் இல்லை. விவசாயக்கடன், நகைக்கடன், கல்விக்கடன் தள்ளுபடி, பெண்களுக்கான மாத உதவித்தொகை, சிலிண்டருக்கான உதவி தொகை என, பல வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றவில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natesa -  ( Posted via: Dinamalar Android App )
19-மார்-202217:19:48 IST Report Abuse
natesa Union BJP government is taking all GST money from TN.
Rate this:
Cancel
TRUBOAT - Chennai,இந்தியா
19-மார்-202215:20:03 IST Report Abuse
TRUBOAT சிலிண்டர் விலையை வானளாவ உயர்த்தி அதற்கு கொடுக்கப்பட்ட மாநிலத்தையும் நிறுத்தி ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை நிலை குழைய வைத்தது யார்.... Inflation மிக உயர்வு.... EPFO வட்டி 40 ஆண்டுகளில் மிகவும் குறைக்க பட்டிருக்கிறது....
Rate this:
Cancel
TRUBOAT - Chennai,இந்தியா
19-மார்-202215:15:55 IST Report Abuse
TRUBOAT மத்திய அரசின் பட்ஜெட்ல பொது ஜனங்களுக்கு என்ன பயன் இருந்துச்சுனு சொல்லுங்க... வருமான வரியை கொஞ்சம் கூட சலுகை அளிக்காமல் உறிஞ்சுவது.... க்ளீன் கங்கை / ஸ்வாட்ச் பாரத் போன்ற எந்த திட்டமும் பயன் அளிக்கவில்லை. மக்களின் வறுமை நிலை அதிகரித்துள்ளது, வேலையின்மை அதிகரித்துள்ளது... இதை உங்களால் மறுக்க முடியுமா... கடந்த 8 ஆண்டு ஆட்சியில் ஒரு பொது துறை நிறுவனம் கூட உருவாக்கப்படவில்லை. மாறாக 23 பொது துறை நிறுவனம் தனியாருக்கு விற்பனை / மூடு விழா நடந்துள்ளது.
Rate this:
raja - Cotonou,பெனின்
19-மார்-202217:05:07 IST Report Abuse
rajaஎதுல இந்த கதையெல்லாம் சொல்லி இருக்காங்கன்னு ஆதாரத்துடன் சொல்லு உடன்பிறப்பே..... மக்கள் தெரிந்துகொள்ளட்டும் உன் பொய்யை........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X