'காஷ்மீர் பைல்ஸ்' படம் உண்மைக்கு எதிரானதாக உள்ளது: ஒமர் அப்துல்லா

Updated : மார் 20, 2022 | Added : மார் 19, 2022 | கருத்துகள் (79) | |
Advertisement
ஸ்ரீநகர்: “காஷ்மீர் பண்டிட்கள் புலம்பெயர்ந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தின் போது பரூக் அப்துல்லா முதல்வராக இல்லை. ஜக் மோகன் கவர்னராக இருந்தார். மத்தியில் வி.பி.சிங்கின் ஆட்சியை பா.ஜ.க., வெளியிலிருந்து ஆதரித்தது.” என காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறினார்.தி காஷ்மீர் பைல்ஸ் என்ற, 'பாலிவுட்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. 90களில், ஜம்மு - காஷ்மீரில் பண்டிட்
 'காஷ்மீர் பைல்ஸ்' படம் உண்மைக்கு எதிரானதாக உள்ளது: ஒமர் அப்துல்லா

ஸ்ரீநகர்: “காஷ்மீர் பண்டிட்கள் புலம்பெயர்ந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தின் போது பரூக் அப்துல்லா முதல்வராக இல்லை. ஜக் மோகன் கவர்னராக இருந்தார். மத்தியில் வி.பி.சிங்கின் ஆட்சியை பா.ஜ.க., வெளியிலிருந்து ஆதரித்தது.” என காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறினார்.
தி காஷ்மீர் பைல்ஸ் என்ற, 'பாலிவுட்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. 90களில், ஜம்மு - காஷ்மீரில் பண்டிட் சமூகத்தினர் படுகொலை செய்யப்பட்டது. சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறிய நிலை பற்றி இப்படம் காட்சிப்படுத்தியுள்ளனர். இப்படத்தை பிரதமர் மோடி உள்ளிட்ட பல பா.ஜ., தலைவர்கள் பாராட்டினர். பா.ஜ., ஆளும் மாநிலங்களில் இப்படத்திற்கு வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.


latest tamil newsஇந்நிலையில் திரைப்படம் குறித்து தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா கூறியதாவது:
'தி காஷ்மீர் பைல்ஸ்'வணிக திரைப்படமாக இருந்தால் யாருக்கும் பிரச்னை இல்லை. ஆனால், அது யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டது என படக்குழுவினர் கூறினால் உண்மை நேர் எதிரானதாக இருக்கும். காஷ்மீரி பண்டிட்கள் புலம்பெயர்ந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தின் போது பரூக் அப்துல்லா முதல்வராக இல்லை. ஜக்மோகன் கவர்னராக இருந்தார். மத்தியில் வி.பி.சிங்கின் ஆட்சியை வெளியிலிருந்து பாஜக ஆதரித்தது. இந்த உண்மை ஏன் படத்திலிருந்து விலக்கப்பட்டது.

உண்மையை உங்களுக்கு ஏற்ப மாற்றாதீர்கள். அது சரியானதில்லை. காஷ்மீரி பண்டிட்டுகள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம். ஆனால் அதே துப்பாக்கியால் குறிவைக்கப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்களின் தியாகத்தை மறந்துவிடக் கூடாது.பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த சிலரே இன்னும் திரும்பவில்லை.

காஷ்மீரை விட்டு வெளியேறிய அனைவரையும் மீண்டும் அழைத்து வரக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் மதவாத பிரிவை உருவாக்க வேண்டாம். இந்த படத்தை எடுத்தவர்களுக்கு பண்டிட்கள் காஷ்மீர் திரும்ப வேண்டும் என்கிற எண்ணம் இல்லை என்றே கருதுகிறேன். அவர்கள் காஷ்மீருக்கு வெளியே இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishna -  ( Posted via: Dinamalar Android App )
19-மார்-202223:21:02 IST Report Abuse
krishna ENGE NAMMA OSI BRIYANI TASMAC MATTAIGAL SAMACHIR BOYS KATTUMARAM KUDUMBA AAYUTKAALA ADIMAIGAL DHURVESH, DHARMARAJ THANGA RATHINAM ,RAMAKRISHNAN NATESAN, VIDHYUDH BHISHMAR ,ADVAIFH RAMAN PONDROR INGU VANDHU KASHMIR PANDITHGALAI INA PADUKOLAI SEIDHA MOORGA MIRUGANGALUKKU MUTTU KODUKKA KAANUM.UDAN SEYYUNGAL.ILLAI ENDRAAL THUNDU SEATTU KAIPULLA KADUM KOBAM KOLVAAR.UNGALUKKU OSI BRIYANI SUPPLY CUT AAGIVIDIM.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
19-மார்-202220:32:38 IST Report Abuse
sankaranarayanan காஷ்மீரி பண்டிட்கள் புலம்பெயர்ந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தின் போது பரூக் அப்துல்லா முதல்வராக இல்லை. ஜக்மோகன் கவர்னராக இருந்தார். யார் இருந்திருந்தால் என்ன. புயம் பெயர்த்தப்பட்டவார் ஆளான கொடுமைகள் - கொடூரங்கள் கணக்கிலடங்காது. இவ்வவளவும் தெரிந்த முன்னாள் முதலமைச்சர் இப்படி பேசுவது சரி அல்ல. இவரை அப்போது ஆட்சியில் இல்லாமலிருந்தால் என்ன? இவர் அதற்கு எதுகிற்பு தெரிவித்தாரா அப்போது? இவர் மவுனம் சாதித்தது ஏன்? இது நடந்ததது உண்மை இல்லை என்று இவரால் நிரூபணம் செய்ய முடியுமா இப்போதாவது?
Rate this:
visu - Pondicherry,இந்தியா
27-மார்-202209:25:04 IST Report Abuse
visuபாரூக் அப்துல்லாதான் முதல்வர் காங்கிரஸ் துணையுடன் .இந்த காஸ்மீரி பண்டிட் ஒழிப்பு 1984. முதல் வளர்க்கப்பட்டு வந்தது 18. ஆம் தேதி ஒரு முதல்வர் எந்த காரணமும் சொல்லாமல் பதவி விலகுகிறார் 19.ஆம் தேதி வன்முறை வெடிக்கிறது புரிந்து கொள்ளவும்...
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
19-மார்-202220:30:51 IST Report Abuse
r ravichandran உங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பது தான் , இன்னும் பண்டிட் சமூகத்தினர் திரும்ப வரவில்லை. இனி அவர்கள் திரும்ப வந்தால் கூட கூலி வேலை செய்து தான் பிழைக்க வேண்டும். அவர்கள் வீடுகள், மனைகள் , தொழில்கள் அனைத்தையும் பிடுங்கி கொண்டு தான் அவர்கள் துரத்தி அடிக்க பட்டனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X