சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 58 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 118 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று (மார்ச்18 ம் தேதி) 61 பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று (மார்ச் 19 ம் தேதி) பாதிப்பு 58 ஆக குறைந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 36,324 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 58 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன்மூலம் கோவிட்டினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 34,52,334 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 6,52,31,238 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 33 பேர் ஆண்கள், 25 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 20,14,918 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 14,37,378 ஆகவும் அதிகரித்து உள்ளது. 118 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,13,639 ஆக உயர்ந்துள்ளது.
கோவிட் பாதிப்பு காரணமாக இன்று உயிரிழப்பு இல்லை. இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று ( மார்ச் 18 ம் தேதி) 19 ஆக இருந்த நிலையில் இன்று (மார்ச் 19 ம் தேதி) 24 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு விபரம்
![]()
|
![]()
|