புதுடில்லி :வரலாறு காணாத வகையில் வருமான வரி வசூல் உயர நான்கு முக்கிய காரணங்கள் உள்ளதாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
நடப்பு, 2021 - 22ம் நிதியாண்டில் ஏப்., - மார்ச் 16 வரை தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் செலுத்திய வருமான வரி, இதுவரை இல்லாத வகையில், 13 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் ஜே.பி.மொஹபத்ரா கூறியதாவது:
வரலாறு காணாத வகையில் வருமான வரி வசூல் உயர நான்கு காரணங்கள் உள்ளன.
![]()
|
முதலாவது, இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதனால் வரி வசூல் அதிகரித்துள்ளது. அடுத்து, அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் பயனாக வரி வசூல் உயர்ந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக வருமான வரித் துறையில் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் தற்போது பயன் அளிக்கத் துவங்கியுள்ளன.
நான்காவதாக, வருமான வரித் துறையின் தகவல் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டதை கூறலாம். இதனால், ஒருவர் ஓராண்டில் மேற்கொண்ட பணப் பரிவர்த்தனைகளை வருமான வரி வலைதளத்தில் சுலபமாக அறிந்து, அதற்கேற்ப தன்னிச்சையாக வரி செலுத்த முடிகிறது. நடப்பு மார்ச் 16 நிலவரப்படி, வருமான வரி வசூல், 13 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இதில் 54 ஆயிரம் கோடி முதல் 55 ஆயிரம் கோடி ரூபாய் வரை தான் வருமான வரித் துறை 'நோட்டீஸ்' அனுப்பி வசூலித்தது. இவ்வாறு அவர் கூறினார்.