அரசியல் செய்தி

தமிழ்நாடு

30 ஆண்டுகளாக தொடரும் புதிய சட்டசபை கனவு

Updated : ஆக 22, 2011 | Added : ஆக 21, 2011 | கருத்துகள் (31)
Advertisement
New assembly building, dream, புதிய சட்டசபை கனவு,

புதிய தலைமைச் செயலக கட்டடம், சர்வதேச வசதிகளுடன் கூடிய பல்துறை மருத்துவமனையாக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளதன் மூலம், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், புதிய தலைமைச் செயலக கனவு இன்னும் தொடர்கிறது.தமிழகத்தில், புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டுமென்ற திட்டம், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. தி.மு.க., ஆட்சியில், 2008ல், அண்ணா சாலை ஓமந்தூரார் தோட்டத்தில், புதிய தலைமைச் செயலகம் கட்டத் துவங்கி, 2010, மார்ச் 13ல் புதிய தலைமைச் செயலகம் திறக்கப்பட்டது.

புதிய தலைமைச் செயலக கட்டடத்திற்காக, ஓமந்தூரார் தோட்டத்தில், சி.பி.சி.ஐ.டி., போலீஸ் தலைமை அலுவலகமான எம்பையர் கட்டடம், பல கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலக கட்டடம், பல ஆண்டு பழமையான கலைவாணர் அரங்கம், திருவல்லிக்கேணி தீயணைப்பு நிலையம், நூற்றுக்கணக்கான மரங்கள், இயற்கை விநாயகர் கோவில், தலைமை செயலக ஊழியர்கள் குடியிருப்பு, பழைய "கில்டு' பத்திரிகையாளர் அலுவலக கட்டடம், பழைய எம்.எல்.ஏ.,க்கள் விடுதி உள்ளிட்டவை இடித்து அகற்றப்பட்டன.


சட்டசபைக்கு புதிய கட்டடம் கட்ட 1983ல், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., முயற்சி எடுத்து, மெரீனா அருகே இடம் பார்க்கப்பட்டு, பின் திட்டம் கைவிடப்பட்டது. அப்போது, திருச்சிக்கு சட்டசபை கொண்டு செல்ல முடிவானது. பின், 2002ல் முதல்வரான ஜெயலலிதா, மாமல்லபுரத்தில் கட்ட முடிவெடுத்தார். பின், மெரீனா அருகே ராணி மேரி கல்லூரி வளாகத்தில் கட்ட முடிவெடுத்த போது, மாணவர்கள் போராட்டம் நடத்தினர்; போராட்டத்திற்கு தி.மு.க., ஆதரவு தெரிவித்தது.இதையடுத்து, அந்த திட்டமும் கைவிடப்பட்டு, கோட்டூர்புரத்தில் கட்ட முடிவெடுக்கப்பட்டு அதுவும் கைவிடப்பட்டது. தற்போது, நெருக்கடி மிகுந்த பகுதியில், கட்டப்பட்ட புதிய கட்டடத்திலும் தலைமைச் செயலகம் வராமல், தொடரும் கனவாகவே உள்ளது.


நிலையில்லாத சட்டசபைஜார்ஜ் கோட்டை 1921 முதல், 1937 வரை ஆங்கிலேயர் ஆட்சி பீடமாக இருந்தது. பின், 1937ல் ராஜாஜி, சென்னை மாகாண அமைச்சரானதும், சேப்பாக்கம் செனட் கட்டடத்தில், சட்டசபை கூடியது. பின், ராஜாஜி ஹாலில் சட்டசபை நடந்தது. பின், 1947 முதல் 1952 வரை கோட்டையிலும், 1956 வரை கலைவாணர் அரங்கிலும் சட்டசபை கூடியது. இதையடுத்து, 1957 முதல் 2010 ஜனவரி வரை, மீண்டும் கோட்டையில் சட்டசபை கூடியது. இதையடுத்து, ஒரு பட்ஜெட் மற்றும் இடைக்கால பட்ஜெட்டுக்கு புதிய கட்டடத்திலும், 16 மாத இடைவெளிக்குப் பின், மீண்டும் கோட்டையிலும் சட்டசபை கூடியுள்ளது.


-நமது சிறப்பு நிருபர்-


Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srm selva - stamford,யூ.எஸ்.ஏ
22-ஆக-201120:15:15 IST Report Abuse
srm selva I don't understand how ppl justifying the jj action on new secretariat. It is a big blunder not to use the new building. Both DMK and ADMK are curse for the TN people. Biggest sufferers are tamilnadu people. Most of the schemes are half boiled and the next government cancelled without second thought. How will TN will improve if parties acted like this?
Rate this:
Share this comment
Cancel
Dravidan - Pattaya,தாய்லாந்து
22-ஆக-201119:42:12 IST Report Abuse
Dravidan ஆமா ஆமா அறிவாலயம்..இந்த சேகர் சேகரன் சிங்கப்பூர் இவனோட பாட்டன் சம்பாதித்த சொத்துதான. அதனால அத பத்தி இங்க பேசறான்..
Rate this:
Share this comment
Cancel
Parthasarathy Boovaragavan - Chennai (Madras),இந்தியா
22-ஆக-201118:44:52 IST Report Abuse
Parthasarathy Boovaragavan எம்ஜியார் சொன்னதுபோல் தலைமைசெயலகம் திருச்சி தஞ்சை இடையில் அமைந்தால்தான் பொதுமக்களுக்கும் வசதியாக இருக்கும். சென்னையில் கூட்டம் குறையும். இதை முதலமைச்சர் பரிசீலிக்கலாம் என்பது எனது கருத்து. பூகோள அமைப்பில் பார்த்தாலும் கூட தமிழகத்தின் மையப்பகுதி இதுதான் என்பது உண்மை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X